பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
"பழங்குடியினர் வாழ்வாதாரம் பாதுகாப்பு" குறித்து அமைச்சர் அர்ஜுன் முண்டா மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுடன் காணொலி காட்சி மூலம் உரையாடினார்
Posted On:
12 MAY 2020 6:40PM by PIB Chennai
"பழங்குடியினர் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பு" குறித்து பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சர், திரு. அர்ஜுன் முண்டா, மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுடன் புது தில்லியில் இருந்து இன்று காணொலி காட்சி மூலம் உரையாடினார். 20க்கும் அதிகமான மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் இருந்து முதல் அமைச்சர்கள், துணை முதல்வர்கள் மற்றும் மாநில வன அமைச்சர்கள் ஆகியோர், உயர் அதிகாரிகளுடன் இந்தக் கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்.
காணொலியில் உரையாடிய திரு. அர்ஜுன் முண்டா, சிறு வன தயாரிப்புகளை திருத்தப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு கொள்முதல் செய்வதை அதிகப்படுத்தி, பழங்குடி வாழ்வாதாரத்தை ஆதரிப்பதற்காக மாநிலங்களை பாராட்டினார்.
ஐம்பது சிறு வன தயாரிப்புகளுக்கான திருத்தப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலை மே 1 ம் தேதி முதல், ரூ. 40 கோடி மதிப்புள்ள கொள்முதலை 17 மாநிலங்கள் செய்துள்ளன. கொள்முதல் பணியை இன்னும் ஐந்து மாநிலங்கள் விரைவில் தொடங்கும்.
பிரதமரின் வன வளத் திட்டத்தின் மாநில அளவிலான செய்ல்பாட்டையும் பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சர், திரு. அர்ஜுன் முண்டா ஆய்வு செய்தார்.
பல்வேறு மாநிலங்களில் இருந்து திரும்பியுள்ள பழங்குடியினருக்கு வேலை வாய்ப்பு அளிப்பதற்காக சிறு தொழில் நிறுவனங்களை கிராம அளவில் அமைப்பதற்கும், பழங்குடியினர் இடையே உள்ள இயற்கையாய் அமையப்பெற்ற பாரம்பரிய அறிவை பயன்படுத்துவதற்கானத் தேவை குறித்தும் பழங்குடியினர் விவகாரங்கள் இணை அமைச்சர், திருமதி. ரேணுகா சிங் பரிந்துரை செய்தார்.
வன் தன் மையங்கள், சுய உதவிக் குழுக்கள் மற்றும் பழங்குடியினரின் தயாரிப்புகளை சந்தைப்படுத்துதல் மூலம் பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்துக்கும் வேலைவாய்ப்புக்கும் உதவுவதற்காக மத்திய அரசுக்கு பல்வேறு மாநிலங்கள் நன்றி தெரிவித்தன.
***
(Release ID: 1623526)
Visitor Counter : 284