ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
பிஎம் கேர்ஸ் நிதியத்திற்கு பிபிபிஐ ரூ.25 லட்சம் நிதியுதவி
प्रविष्टि तिथि:
12 MAY 2020 5:15PM by PIB Chennai
கொவிட்-19ஐ எதிர்த்துப் போரிடும் அரசுக்கு ஆதரவளிப்பதற்காக, மத்திய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் மருந்துப் பொருட்கள் துறையின் கீழ் செயல்படும் இந்திய மருந்துப் பொருட்கள் பொதுத்துறை நிறுவனங்கள் அமைப்பு (பிபிபிஐ), ரூ.25 லட்சத்தை பிஎம் கேர்ஸ் நிதியத்திற்கு பங்களிப்பு செய்துள்ளது.
இந்தத் தொகைக்கான காசோலையை, இத்துறையின் செயலர் திரு பி.டி.வகேலா, மத்திய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் திரு டி வி சதானந்த கவுடாவிடம் இன்று புது தில்லியில் அளித்தார்.
இந்தத் தொகையை பிபிபிஐ பணியாளர்கள், மக்கள் மருந்தகங்களின் உரிமையாளர்கள், விநியோகிப்பாளர்கள் ஆகியோர் இணைந்து பங்களிப்பு செய்துள்ளனர்.
(रिलीज़ आईडी: 1623318)
आगंतुक पटल : 290