அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

கோவிட்-19 நோயாளிகளுக்கான முகக்கவசத்துடன் கூடிய செயற்கை சுவாசம் அளிக்கும் “ஸ்வஸ்த்வாயு” கருவியை 36 நாட்களில் வடிவமைத்தது பெங்களூருவில் உள்ள சிஎஸ்ஐஆர்-தேசிய வான்வெளி ஆய்வகம்.

Posted On: 11 MAY 2020 8:49PM by PIB Chennai

அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சிக் கவுன்சிலின் (CSIR) ஒரு அங்கமான, பெங்களூருவில் உள்ள தேசிய வான்வெளி ஆய்வகம், கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, முகக்கவசம் அடிப்படையில், செயற்கை சுவாசம் அளிக்கும் கருவியை வெறும் 36 நாட்களில் வடிவமைத்துள்ளது. நுண்கட்டுப்பாடு அடிப்படையிலான மிகவும் துல்லியமாக மூடப்பட்ட கட்டுப்பாட்டு முறையைக் கொண்ட இந்த அமைப்பு, காற்றை உயர்திறனுடன் வடிகட்டும் (HEPA) அமைப்புடன் உயிர் இணக்கத்தன்மை கொண்ட “முப்பரிமாண அச்சு மடுக்கு மற்றும் இணைப்பு” கொண்டு கட்டமைக்கப்பட்டது. இந்தத் தனிப்பட்ட சிறப்பம்சங்கள், வைரஸ் பரவும் என்ற அச்சத்தைப் போக்க உதவும். ஆக்சிஜன் செறிவூட்டும் அமைப்பு தனியாக இணைக்கப்பட்டுள்ளதுடன், Spontaneous, CPAP, Timed, AUTO BIPAP mode ஆகிய அம்சங்களையும் இது கொண்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் செயல்பாடுகளுக்காக NABL-இன் அங்கீகாரம் பெற்ற அமைப்புகளிடம் சான்று பெற்றுள்ளது. தேசிய வான்வெளி ஆய்வகங்களின் சுகாதார மையத்தில் கடுமையான பரிசோதனை மற்றும் உயிர்மருத்துவச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த இயந்திரத்தின் மிகப்பெரும் சிறப்பம்சமாக எந்தவொரு சிறப்புப் பயிற்சியும் இல்லாமல் எளிதில் பயன்படுத்த முடியும். செலவு குறைவானது, எளிதானது மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பெரும்பாலான பொருள்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை மருத்துவமனை வார்டுகள், தற்காலிக மருத்துவமனைகள், மருந்தகங்களில் வைத்து சிகிச்சை அளிக்க இது பொருத்தமானது. தற்போதைய இந்திய சூழலில் நோயாளிகளுக்கு வீடுகளில் வைத்தும் சிகிச்சை அளிக்க முடியும்.  

 

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/image0010YVV.gif



(Release ID: 1623269) Visitor Counter : 181