பாதுகாப்பு அமைச்சகம்

விசாகப்பட்டினம் விஷ வாயுக்கசிவுப் பிரச்சினையில் மாநில அரசுக்கு உதவ இந்திய விமானப்படை அத்தியாவசிய வேதிப்பொருள்களை அனுப்பி வைத்தது.

Posted On: 11 MAY 2020 5:37PM by PIB Chennai

விசாகப்பட்டினம் விஷ வாயுக் கசிவுப் பிரச்சினையில் ஆந்திர மாநில அரசுக்கு உதவும் வகையில் இந்திய விமானப் படை, தனது மனிதாபிமான மற்றும் பேரிடர் உதவித் திட்டத்தின் கீழ் 2020 மே 9-ம் தேதி உதவி நடவடிக்கையை மேற்கொண்டது. ஆந்திர மாநில வர்த்தகத் தொழில்துறை வேண்டுகோளின் அடிப்படையில் இந்திய விமானப்படை, 8.3 டன் அத்தியாவசிய வேதிப்பொருள்களை விசாகப்பட்டினம் எல்.ஜி.பாலிமர் நிறுவனத்தின் ஸ்டைரீன் மோனோமர் வாயு சேமிப்புக் கலத்தில்
ஏற்பட்ட கசிவைத் திறம்படக் கட்டுப்படுத்துவதற்காக அனுப்பி வைத்தது.

இதற்கென இந்திய விமானப் படையின் அன் - 32 ரக விமானங்கள் இரண்டு, குஜராத் மாநிலம் முந்த்ராவில் இருந்து ந்திரப்பிரதேசத்தில் விசாகப்பட்டினத்திற்கு சுமார் 1100 கிலோ டெர்சியரி பூட்டைல்கேட்டிகால் , மற்றும் 7.2 டன் பாலிமெரைசேசன் தடுப்பு மற்றும் பசுமைக் குறைப்பு வேதிப்பொருள்களை அனுப்பி வைத்தது. விஷ வாயுக்கசிவைக் கட்டுப் படுத்தும் நடவடிக்கைகளை மேற்பார்வை இடுவதற்கென தில்லியில் உள்ள பெட்ரோலியம் நிறுவனத்தின் இயக்குர், மற்றும் மும்பையைச் சேர்ந்த ஸ்டைரீன் வாயு நிபுணர் ஆகியோரை விசாகப்பட்டினத்திற்கு அழைத்துச் செல்லும் பணியையும் இந்திய விமானப் படை மேற்கொண்டது.



(Release ID: 1623074) Visitor Counter : 198