பாதுகாப்பு அமைச்சகம்

ஆபரேஷன் சமுத்ர சேது – இந்திய குடிமக்களை ஏற்றிக் கொண்டு மாலே-விலிருந்து புறப்பட்டது ஐஎன்எஸ் மாகர் கப்பல்

Posted On: 10 MAY 2020 8:20PM by PIB Chennai

இந்திய குடிமக்களை அழைத்து வருவதற்காக மாலத்தீவின் மாலே பகுதிக்கு சென்றடைந்த இரண்டாவது இந்திய கடற்படை கப்பலான ஐஎன்எஸ் மகர், பயணிகள் அனைவரும் ஏறியதைத் தொடர்ந்து, மாலே-விலிருந்து புறப்பட்டது.

வெளி நாடுகளிலிருந்து இந்தியர்களை அழைத்து வரும் வந்தே பாரத் இயக்கத்தின் ஒரு அங்கமாக ஆபரேஷன் சமுத்ர சேது திட்டத்தை இந்திய கடற்படை செயல்படுத்தி வருகிறது. மாலத்தீவிலிருந்து இந்திய குடிமக்களை இரண்டாவது கட்டமாக மீட்டு வருவதற்காக ஐஎன்எஸ் மகர் கப்பலை ஈடுபடுத்தியுள்ளது. மாலத்தீவில் தவித்துவந்த இந்தியர்களில் முதல் கட்டமாக 698 பேரை ஐஎன்எஸ் ஜலஸ்வா கப்பல், மே 10 ம் தேதி அழைத்துவந்தது.

மாலே பகுதியில் கனமழை பெய்ததால், நிலைமை மோசமாக இருந்த போதிலும், கப்பலில் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கப்பலில் ஒட்டுமொத்தமாக 202 பேர் ஏறினர்.  இதில், 24 பெண்கள், 2 கர்ப்பிணிகள், இரண்டு குழந்தைகள் அடங்குவர். தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர், காலில் காயமடைந்தவர்.

மே 8-ம் தேதி பின்பற்றப்பட்ட விதிமுறைகள் படி, மீட்கப்படும் பயணிகள் அனைவரும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களது உடைமைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. பல்வேறு மண்டலங்களிலிருந்து வந்து கப்பலில் ஏறுவதன் அடிப்படையில், அடையாள எண் கொடுக்கப்பட்டது.

புறப்படுவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவடைந்ததை அடுத்து, ஐஎன்எஸ் மகர் கப்பல், மாலே-விலிருந்து கொச்சிக்கு இன்று மாலை புறப்பட்டது.

 

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/INSMagar(3)JLQO.jpeg

****(Release ID: 1623005) Visitor Counter : 25