தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
தூர்தர்ஷனிலும் அகில இந்திய வானொலியிலும் விரிவான வானிலை அறிக்கைகள்
Posted On:
08 MAY 2020 9:24PM by PIB Chennai
கோடைகால வெப்பநிலை உயர்ந்து வரும் நிலையில் தேசியப் பொது ஒளிபரப்பு அமைப்புகள் என்ற முறையில் தூர்தர்ஷனிலும் அகில இந்திய வானொலியிலும் செய்தி ஒளிபரப்பின்போது நாட்டின் முழு பரப்பு தொடர்பான விரிவான வானிலை அறிக்கைகள் முக்கிய கவனம் பெறுகின்றன.
தூர்தர்ஷனில், ஒவ்வொரு நாள் காலை மற்றும் மாலைச் செய்தி அறிக்கைகளில் வானிலை அறிக்கை இடம்பெறும் அதே வேளையில், அகில இந்திய வானொலியில் தினமும் அனைத்து முக்கிய செய்தி அறிக்கைகளிலும் முக்கிய வானிலைக் குறிப்புகள் ஒளிபரப்பாகின்றன.
டிடி கிசான் தொலைக்காட்சியில் வானிலைக்கென தனியாக விரிவான ஒளிபரப்பு மேற்கொள்ளப்படுகிறது. இதில் ஒவ்வொரு நாளும் புதிதாக 3 அரை மணி நேர செய்தி அறிக்கையும் 4 புதிய 5 நிமிட செய்தி அறிக்கைகளும் இடம் பெருகின்றன.
இந்த வானிலை அறிக்கைகளில் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கு சார்ந்த வானிலையின் ஒவ்வொரு சிறிய விவரமும் இடம்பெறுகிறது. இவற்றில் நாட்டில் நிலவும் தீவிர வானிலை நிலவரத்துக்கு முக்கிய இடம் அளிக்கப்படுவதுடன், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி , கில்கிட் முதல் குவாஹத்தி, பல்டிஸ்தான் முதல் போர்ட் ப்ளேர் வரையிலான பல்வேறு இடங்களில் நிலவும் வெப்ப நிலைகளும் குறிப்பிடப் படுகின்றன.
தேசிய அலை வரிசைகள் தவிர தூர்தர்ஷன் , அகில இந்திய வானொலி ஆகியவற்றின் மாநில செய்திப் பிரிவுகள் தினமும் வானிலை செய்திக் குறிப்புகளை மாநில மொழிகளில் அப்போதைக்கு அப்போதே ஒளிபரப்புச் செய்து வருகின்றன.
(Release ID: 1622419)
Visitor Counter : 162