வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகமும் ஈஷா அறக்கட்டளையும் இணைந்து ஆன்மிக குருவுடன் நேரடி இணையவழி பயிலரங்கு ஏற்பாடு.

Posted On: 08 MAY 2020 6:08PM by PIB Chennai

நம் ஒவ்வொருவருக்குள்ளும் தூய்மைக்கான ஒரு போர்வீரன் இருக்கிறான் என்று ஸ்ரீசத்குரு கூறினார்.  ``துடைப்பம் என்பது இந்தியாவை சுத்தம் செய்யும் பொருள் மட்டுமல்ல. நமது நகரங்களை சுத்தமாக வைத்துக் கொள்வதில் நமது குடிமக்களை தீவிரமாகப் பங்கேற்கச் செய்யும் அம்சமாகவும் உள்ளது'' என்றும் அவர் கூறினார். ``சவால்மிகுந்த நேரத்தில் சத்குருவுடன் தூய்மைப் பணிப் போர் வீரர்கள்' என்ற தலைப்பில் ஈஷா அறக்கட்டளையுடன் இணைந்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் ஏற்பாடு செய்த நேரடி இணையவழி பயிலரங்கில் பேசிய ஸ்ரீசத்குரு, இந்தக் கருத்தைத் தெரிவித்தார். சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த பயிலரங்கில்,  மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உஜ்ஜெயின், சூரத், கிழக்கு டெல்லி, ஆக்ரா, மதுரை மாநகர ஆணையாளர்கள் பங்கேற்றனர். இப்போதைய நெருக்கடியை  எதிர்கொள்வது தொடர்பான வலுவான சிந்தனைகளை சத்குரு வழங்கினார்.

கோவிட் தாக்குதலுக்கு எதிராக முன்களத்தில் நின்று செயல்பட்டு வரும் முதன்மையானவர்களாக உள்ள தூய்மைப் பணியாளர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் செயலாளர் திரு துர்கா சங்கர் மிஸ்ரா ஒருங்கிணைப்பு செய்து நடத்தினார். தூய்மைப் பணியாளர்களின் கேள்விகளுக்கும் ஆன்மிக குரு பதில்கள் அளித்தார்.



(Release ID: 1622218) Visitor Counter : 146