அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

நீர் மாசு கட்டுப்பாட்டுக்காக, ஆற்றல் சேகரிப்பு திறன், ஆப்டிகல் சென்சார் கொண்ட நானோ பொருட்கள் தயாரிப்பு: விருது பெற்ற ஆசிரியர் சாதனை

Posted On: 06 MAY 2020 6:41PM by PIB Chennai

வாரணாசியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில்  உதவிப் பேராசிரியராக உள்ள டாக்டர் ஆஷிஷ்குமார் மிஷ்ராவும் அவரது குழுவினரும், உயர் மின்தேக்கிகளில் அதிக அளவில் ஆற்றல் அடர்த்தியும் மின் அடர்த்தியும் கிடைக்கச் செய்வதற்காக நானோ பொருட்களை அடிப்படையாக கொண்ட சூப்பர் கெபாசிட்டர்களை உருவாக்குவதில் கணிசமான சாதனை படைத்துள்ளனர். .

மத்திய அறிவியல் தொழில் நுட்பத் துறையால் நிறுவப்பட்ட இன்ஸ்பயர் ஆசிரியர் விருது பெற்றவர் டாக்டர் மிஷ்ரா.

மிதமான வெப்பநிலை 100 டிகிரி சென்டிகிரேடில், உயர்ந்த கெப்பாசிட்டர் செயல்திறன் கொண்ட குறைந்த கிராபின் ஆக்சைடு ஒன்றை டாக்டர் மிஷ்ரா மற்றும் அவரது ஆய்வுக் குழுவினர் உருவாக்கியுள்ளார்கள். இதற்கான தயாரிப்பு முறை, வர்த்தக நோக்கங்களுக்குப் பொருந்தும் வகையில், குறைந்த செலவிலானது. மெட்டீரியல் ரிசர்ச் எக்ஸ்பிரஸ் இதழில் இந்த ஆய்வு குறித்து வெளியிடப்பட்டுள்ளது.

ஆற்றல் சேமிப்பு பற்றிய ஆய்வுகள் தவிர நானோ பொருட்களை ஆப்டோ எலக்ட்ரானிக் செயல்பாடுகளுக்கும் பயன்படுத்துவது குறித்தும் டாக்டர் மிஷ்ராவின் குழு ஆய்வு செய்து வருகிறது. இது தொடர்பாக, இக்குழு, கார்பன் மற்றும் உலோகத்தினாலான பயன் செமிகண்டக்டர்களுக்கான புதுமையான நானோ அமைப்புகளைக் கண்டறியும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

மிக மிகக் குறைந்த அளவிலான அடர்த்தி கொண்ட நீரிலுள்ள, ஊறு விளைவிக்கக் கூடிய மூலக்கூறுகளைக் கண்டறிய  உதவும். 

(வெளியீடு:https://doi.org/10.1021/acs.jpclett.9b03726)



(Release ID: 1621795) Visitor Counter : 150