பாதுகாப்பு அமைச்சகம்
சுரங்கப்பாதை பணிகளை செப்டம்பர் 2020க்குள் முழுமையாக முடிக்க, ஊரடங்கின் போதும் எல்லையோர சாலைகள் அமைப்பு தீவிரமாகச் செயல்படுகிறது
प्रविष्टि तिथि:
05 MAY 2020 4:12PM by PIB Chennai
கட்டுமானத்தின் முக்கியமான கட்டத்தில் இருக்கும் இமாச்சல பிரதேசத்தின் பிர் பஞ்சால் எல்லைகளில் அடல் சுரங்கப்பாதைத் திட்டப்பணிகளை முடிக்க எல்லையோரச் சாலைகள் அமைப்பு (BRO) தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
சாலை மேற்பரப்புப் பணிகள், விளக்குகள் பொருத்துல், காற்றோட்டம் ஏற்படுத்த வெண்டிலேட்டர்கள் அமைத்தல் மற்றும் தானியங்கி போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்புகள் உள்ளிட்ட பணிகள் மின் இயக்கவியல் திட்டப்படி நிறுவப்படுகின்றன. சுரங்கப்பாதையின் வடக்கு முகப்பில், சந்திரா ஆற்றின் குறுக்கே 100 மீட்டர் நீளமுள்ள ஒரு உறுதியான எஃகு மேம்பாலமும் கட்டுமானத்தில் உள்ளது. இந்நிலையில், கொவிட்-19 தொற்று நோய் காரணமாக 10 நாட்களுக்கு பணிகள் நிறுத்தப்பட்டன.
எல்லையோரச் சாலை அமைப்பின் தலைமை இயக்குநர், லெப்டினென்ட் ஜெனரல் ஹர்பால் சிங் இந்த விஷயத்தை இமாச்சல முதல்வர் திரு. ஜெய் ராம் தாக்கூர் கவனத்துக்குக் கொண்டு சென்றார். இதன் விளைவாக ஏப்ரல் 05, 2020 அன்று மாநில அரசாங்கத்தின் தீவிர ஒருங்கிணைப்பில் அந்தப்பகுதியில் இருந்த தொழிலாளர்களைக் கொண்டு பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டன.
***********
(रिलीज़ आईडी: 1621241)
आगंतुक पटल : 280