கலாசாரத்துறை அமைச்சகம்
ஊரடங்கின் போது அரிய வாய்ப்பாக இதுவரை கண்டிராத, அரிதாகக் காணப்பட்ட கலைப் படைப்புகளை மெய்நிகர் நிகழ்ச்சி மூலம் தேசிய நவீன கலைக்கூடம் வழங்குகிறது.
Posted On:
04 MAY 2020 5:19PM by PIB Chennai
தேசிய நவீனக் கலைக்கூடம் கொவிட்-19 காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டது. ஆனால், ஊரடங்கின் போது மக்களுக்கான அரிய வகைக் கண்காட்சியை நடத்தும் கலைக்கூடத்தின் உற்சாகத்தைத் தடுக்க கொவிட்-19 தொற்றால் இயலவில்லை. புதுதில்லி தேசிய நவீனக் கலைக்கூடம் தனது ‘’ NGMA KE SANGRAH SE" என்ற மெய்நிகர் நிகழ்ச்சியை பெருமையுடன் வழங்கவுள்ளது. இந்த மெய்நிகர் நிகழ்ச்சி அரிதாகக் கண்டிருக்கக் கூடிய, அல்லது யாரும் கண்டிராத நவீனக் கலைக்கூடத்தின் அரிய பொக்கிஷங்களான கலைப் படைப்புகளைக் காட்சிப்படுத்தக் கூடியதாகும். பெருமைமிகு திரட்டுகளில் இருந்து தினசரி, வாராந்திர கருப்பொருள் அடிப்படையில் இந்த நிகழ்ச்சி அமையும்.
இந்த வாரத்துக்கான கருப்பொருள் கலைஞர்களால் கலைஞர் என்பதாகும். இது குருதேவ் ரபீந்திரநாத் தாகூருக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. அவரது 159-வது பிறந்த தினமான மே 7-ஆம் தேதியைக் கொண்டாடும் வகையில் இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைகிறது. வரும் நாட்களில் சிந்தனைக்கு விருந்தாகும் மேலும் பல கருப்பொருள்களுடன் இது நடைபெற உள்ளது. இந்த மெய்நிகர் கண்காட்சிகள் மற்றும் நிகழ்ச்சிகள், அரிய கலைப் படைப்புகளை வீட்டில் இருந்தவாறே கலை ரசிகர்கள், கலைஞர்கள், சொற்பொழிவாளர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கண்டு களிக்கும் வாய்ப்பை வழங்கும்.
(Release ID: 1621017)
Visitor Counter : 182