அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

கோவிட்-19 தொற்று தாக்குதலை சமாளிப்பதற்கான ஆயத்தங்கள் குறித்து அறிவியல் தொழில்நுட்பத் துறையுடன் டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் ஆலோசனை

Posted On: 03 MAY 2020 8:36PM by PIB Chennai

அறிவியல் தொழில்நுட்பத் துறையின் 50வது நிறுவன நாளை ஒட்டி அறிவியல் தொழில்நுட்பத் துறையின் சார்பு அலுவலகங்கள் மற்றும் தன்னாட்சி நிறுவனங்களின் தலைவர்களுடன்,  மத்திய அறிவியல் தொழில்நுட்பம்,  சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் இன்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். அறிவியல் தொழில்நுட்பத் துறையின் முன் முயற்சிகள் பற்றி, குறிப்பாக கோவிட்-19 நோய்த் தொற்று சூழ்நிலையில் அவர்களுடைய முன் முயற்சிகள் பற்றி அவர் கலந்துரையாடினார்.

இந்தக் கலந்துரையாடலின் போது கோவிட்-19 குறித்த கோவிட்டின் கதை” என்ற மல்டிமீடியா தொகுப்பையும் அவர் அறிமுகம் செய்து வைத்தார். அறிவியல் தொழில்நுட்பத் துறையின் சேவை 50வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை ஒட்டி, அதன் பொன் விழா நிகழ்ச்சிகள் தொடங்கி வைக்கப்பட்டன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த ஆண்டு முழுக்க பல வகையான செயல்பாடுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐம்பதாவது நிறுவன நாளைக் கொண்டாடும் அறிவியல் தொழில்நுட்பத் துறைக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட அமைச்சர், ``கடந்த 49 ஆண்டுகளில் புதுமையான எண்ணங்கள் மூலம் அறிவியல் தொழில்நுட்பத் துறையில் ஏராளமான பங்களிப்புகள் செய்யப்பட்டுள்ளன. தொடக்கநிலை மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு இந்தத் துறை காரணமாக இருந்துள்ளது'' என்று கூறினார். அறிவியல் தொழில்நுட்பத் துறையின் குறிப்பிடத்தக்க சில பங்களிப்புகளை அவர் மேன்மைப்படுத்திக் கூறினார். மத்திய நிதியமைச்சர் இந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவித்த ரூ.8,000 கோடி செலவிலான திட்டம் பற்றி அவர் முக்கியமாகக் குறிப்பிட்டார்.(Release ID: 1620851) Visitor Counter : 175