தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
வருங்கால வைப்பு நிதி அமைப்பின் ஊழியர்கள் PM CARES நிதிக்கு ரூ .2.5 கோடி பங்களிக்கின்றனர்
Posted On:
03 MAY 2020 5:12PM by PIB Chennai
கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக ஏற்பட்டுள்ள தேசிய நெருக்கடியை எதிர்ப்பதில் அரசாங்கத்தின் முன்முயற்சியை ஆதரிக்கும் வகையில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) ஊழியர்களும் ஒரு நாள் சம்பளமான 2.5 கோடி ரூபாயை PM CARES நிதிக்கு நன்கொடையாக அளிக்க தாமாக முன் வந்துள்ளனர், உலகின் மிகப்பெரிய சமூகப் பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), நாட்டின் சேவையில் அனைத்து வழியிலும் உறுதுணையுடன் நிற்கிறது.
உலக சுகாதார அமைப்பால் தொற்று நோயாக அறிவிக்கப்பட்ட கொவிட் -19, கோடிக்கணக்கான இந்தியர்களின் உடல் நலம் மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பிற்கு கடுமையான சவால்களை முன் வைத்துள்ளது. எந்தவொரு அவசர நிலை அல்லது துயர சூழ்நிலையையும் கையாள்வதற்கான முதன்மை நோக்கத்துடன் இந்திய அரசு ‘பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் நிவாரணம்’ (PM CARES Fund) என்ற பெயரில் ஒரு பொதுத் தொண்டு அறக்கட்டளையை அமைத்துள்ளது.
பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா (PMGKY) திட்டத்தின் கீழ் கொவிட் உரிமை கோரல்கள் உள்ளிட்ட ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியை (EPF) திரும்பப் பெறும் உரிமை கோரல்களை விரைவாக செயலாக்குவதன் மூலம் நிவாரணம் வழங்க கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ள வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கூடுதல் பங்களிப்பு செய்து வருவது குறிப்பிடதக்கது.
*************
(Release ID: 1620702)
Visitor Counter : 366