கலாசாரத்துறை அமைச்சகம்
மாபெரும் தொல்லியல் ஆய்வாளர் பேராசிரியர் பி.பி.லால் அவர்களின் நூற்றாண்டையொட்டி, “பேராசிரியர் பி.பி.லால்- இந்தியா மறுகண்டுபிடிப்பு” என்ற மின்னணு புத்தகத்தை புதுடெல்லியில் மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் வெளியிட்டார்
Posted On:
02 MAY 2020 12:46PM by PIB Chennai
மாபெரும் தொல்லியல் ஆய்வாளர் பேராசிரியர் பி.பி.லால் அவர்களின் நூற்றாண்டையொட்டி, “பேராசிரியர் பி.பி.லால்- இந்தியா மறுகண்டுபிடிப்பு” என்ற தலைப்பிலான மின்னணு புத்தகத்தை புதுடெல்லியில் மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் திரு.பிரஹலாத் சிங் படேல் இன்று வெளியிட்டார்.
இந்தப் புத்தகத்தை பேராசிரியர் பி.பி.லால் நூற்றாண்டுக் கொண்டாட்டத்துக்கான ஏற்பாட்டுக் குழுவுடன் இணைந்து நூற்றாண்டு சிறப்புப் பதிப்பாக மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகம் தயாரித்துள்ளது. தொல்லியல் துறைக்கு அவர் அளித்த அளப்பரிய பங்களிப்புக்காக கலாச்சாரத்துறை அளிக்கும் அஞ்சலியாக இந்தப் புத்தகம் அமைந்துள்ளது. முன்னதாக பேராசிரியர் பி. பி. லாலை காலையில் நேரில் சந்தித்த கலாச்சாரத் துறை அமைச்சர் திரு.பிரஹலாத் சிங் படேல், அவருக்கு மரியாதை செலுத்தியதுடன், பிறந்த நாளையொட்டி வாழ்த்துக்களையும் கூறினார்.
புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய திரு.படேல், வாழும் கலைஞராக பேராசிரியர் பி. பி. லால் திகழ்வதாகவும், இவர் போன்ற மாபெரும் ஆளுமையைப் பெற்றது இந்தியாவின் பாக்கியம் என்றும் கூறினார். கடந்த காலங்களில் ஆங்கிலேயர் ஆட்சியின் போது, அழிக்கப்பட்ட இந்தியாவின் பாரம்பரியத்தை மீண்டும் கண்டுபிடித்த பேராசிரியர் பால், இந்திய தொல்லியல் துறையில் மதிப்புமிகுந்த ரத்தினமாக இருப்பதாக தெரிவித்தார். மேலும் அவர், தனது தாய்நாட்டுக்காக தனது ஒட்டு மொத்த வாழ்க்கையையும் அர்ப்பணித்த மாபெரும் தொல்லியல் ஆய்வாளரின் நூற்றாண்டைக் கொண்டாடுவதில் கலாச்சார அமைச்சகம் மகிழ்ச்சி அடைவதாக கூறினார். தொல்லியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மட்டுமன்றி, இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அழியாத உந்து சக்தியாக பேராசிரியர் லால் இருப்பதாகவும் திரு.பிரஹலாத் சிங் படேல் குறிப்பிட்டார்.
*****
(Release ID: 1620371)
Visitor Counter : 206