சுற்றுலா அமைச்சகம்

‘பொறுப்புமிக்க சுற்றுலாவில், வியத்தகு இந்திய மகளிரைப் போற்றுவோம்’ மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகத்தால் நடத்தப்படும் Dekho Apna Desh ‘பாருங்கள் நமது தேசத்தை’ என்ற தொடர் கருத்தரங்கின் பன்னிரண்டாவது தொடர்.

Posted On: 01 MAY 2020 4:00PM by PIB Chennai

மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகத்தால் நடத்தப்படும் Dekho Apna Desh - ‘பாருங்கள் நமது தேசத்தை’ என்ற தொடர் கருத்தரங்கின் பன்னிரண்டாவது தொடர், 30 ஏப்ரல் 2020 அன்று நடைபெற்றது. ‘பொறுப்புமிக்க சுற்றுலாவில், வியத்தகு இந்திய மகளிரைப் போற்றுவோம்’ என்ற தலைப்பிலான இந்தக் கருத்தரங்கில், பயணங்கள் குறித்த மாற்றுக் கற்பனைகள் கொண்ட சக்தி வாய்ந்த, தனிப்பட்ட, சில பெண்களின் அனுபவக் கதைகள் பகிர்ந்து கொள்ளப்பட்டன.

  சுற்றுலா மூலமாக தங்களது வாழ்விலும், தாங்கள் வாழும் சமுதாயத்திலும், தனி நபர்கள் எவ்வாறு மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்று இந்த இணையவழிக் கருத்தரங்கில் விளக்கப்பட்டது. பயணங்களை மேற்கொள்ளும் போது, உள்ளூர் ஆதாரங்களைப் பயன்படுத்துவது; இல்லங்களில் தங்குவது;  ஆவணப் பதிவுகளில்லாத, வெளியுலகிற்கு அதிகம் தெரியாத நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பது; குடும்பத்தினரால் நடத்தப்படும் சிறு உணவகங்களில் உண்பது; போன்றவை, உள்ளூர்வாசிகளுக்கு மிகப்பெரிய மாற்றமளிக்கும்; சுற்றுலாவால் பயனடையும் பகுதிகளின் வளர்ச்சிக்கு இவை உதவும். 

அவுட்லுக் வெளியீட்டுக் குழுமத்தின், அவுட்லுக் பொறுப்புள்ள சுற்றுலா முயற்சி குழுவின் சொய்டி பானெர்ஜீ (Soity Banerjee) ராதிகா பி நாயர், (Radhika P Nair) சோனாலி சாட்டர்ஜீ (Sonali Chatterjee)  ஆகியோர் கூறுகையில், கோவிட்-19 நோய்க்குப் பிறகு வரக்கூடிய காலங்களில், இல்லங்களில் தங்குதல், தொலைதூரப்பகுதிகளுக்குச் செல்லுதல், போன்றவை அதிகமான பயணிகளை ஈர்க்கும் என்றும், அப்போது, இந்தப் பெண்களின் பணி மேலும் முக்கியமானதாக இருக்கும் என்றும் குறிப்பிட்டனர்.

இந்த இணையவழிக் கருத்தரங்குகளை காணத் தவறியவர்கள், இவற்றை இங்கு காணலாம்.  

 https://www.youtube.com/channel/UCbzIbBmMvtvH7d6Zo_ZEHDA/featured

மத்திய அரசின் சுற்றுலாத்துறை சமூக வலைத்தளங்களிலும் இவற்றைக் காணலாம்.



(Release ID: 1620094) Visitor Counter : 148