அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
கோவிட்-19ன் கணித மற்றும் உருவகப்படுத்தும் அம்சங்களை ஆய்வு செய்ய நிதி உதவிக்கு ஒப்புதல் அளித்தது அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியம்
प्रविष्टि तिथि:
30 APR 2020 6:08PM by PIB Chennai
கோவிட்-19 பெரும் தொற்றை எதிர்கொள்வதற்காக கணித மாதிரியியல் மற்றும் கணக்கீட்டு அம்சங்களை ஆய்வு செய்ய, இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் சட்டப்பூர்வ அமைப்பான அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியம், 11 ஆராய்ச்சிகளுக்கு மேட்ரிக்ஸ் திட்டத்தின் கீழ் நிதியுதவி செய்ய ஒப்புதல் அளித்தது.
அடிப்படை (எளிதில் பாதிக்கப்படக்கூடிய-பாதிக்கப்பட்ட-குணமான) மாதிரிகளை சற்றே மாற்றி கோவிட்-19க்கு தொடர்புடைய பல்வேறு காரணிகளுக்கு கணித / உருவகப்படுத்துதல் மாதிரிகளை பொறுப்பாக்கி முன்மொழிய பெரும்பாலான இந்த ஆய்வுகள் முயல்கின்றன. பலவகையான மக்கள், அறிகுறிகள் தெரியாத நபர்களின் பங்கு, இடம் பெயர்தல் மற்றும் தனிமைப்படுத்துதல், சமூக இடைவெளி மற்றும் பொது முடக்கத்தின் விளைவு, சமுக பொருளாதார காரணிகள் ஆகியவை இதுபோன்ற சில காரணிகள் ஆகும்.
***
(रिलीज़ आईडी: 1619982)
आगंतुक पटल : 156