அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
கோவிட்-19 உள்ளிட்ட வைரஸ் தொற்றுகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிறப்பான நோய் எதிர்ப்பாற்றலைப் பெறுவதற்காக ஆக்சிஜனேற்ற பாதிப்பை மாற்றுகின்ற நானோ மருந்துகளை எஸ்.என்.போஸ் அடிப்படை அறிவியல் தேசிய மையம் உருவாக்கியுள்ளது.
Posted On:
30 APR 2020 3:21PM by PIB Chennai
கொல்கத்தாவில் உள்ள எஸ்.என்.போஸ் அடிப்படை அறிவியல் தேசிய மையத்தில் (SNBNCBS) உள்ள விஞ்ஞானிகள் பாதுகாப்பான மற்றும் செலவு குறைந்த நானோ மருந்து ஒன்றை உருவாக்கியுள்ளனர். உடலில் ஆக்சிஜனேற்ற பாதிப்பை மாற்றுவதன் மூலம் பலவிதமான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் திறன் இந்த மருந்துக்கு உள்ளது. இந்த ஆராய்ச்சியானது கோவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு நம்பிக்கையைத் தரும் ஒளிக்கீற்றாக அமைந்துள்ளது. நானோ மருந்தானது நமது உடலில் ஆக்சிஜனை உள்ளடக்கிய வேதிவினை புரியும் பொருள்களை (Reactive Oxygen species - ROS) சூழலுக்கு ஏற்ப அதிகரிக்கவோ குறைக்கவோ செய்து நோயைக் குணப்படுத்தும்.
பாலூட்டிகளிடம் ROSகளை கட்டுப்பாடாக அதிகரிக்கும் இந்த ஆய்வானது கோவிட்-19 உள்ளிட்ட வைரஸ் தொற்றுகளைக் கட்டுப்படுத்த நானோ மருந்தை பயன்படுத்தலாம் என்ற புதிய வாயப்புக்கான நம்பிக்கையைத் தருகிறது. பல்வேறு நோய்களைக் குணப்படுத்துவதற்காக விலங்குகளிடம் மேற்கொள்ளப்பட்ட குறைப்பு ஆக்சிஜனேற்ற செயல்முறை (Redox) பரிசோதனைகள் முடிவடைந்துள்ளன. தற்போது மனிதர்களிடம் இந்த ஆய்வை செய்து பார்க்க ஆராய்ச்சி நிறுவனமானது நிதிநல்கையாளர்களை எதிர்நோக்கி இருக்கிறது.
(Release ID: 1619703)
Visitor Counter : 140