அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

லடாக் இமாலயாப் பகுதிகளில் 35 ஆயிரம் ஆண்டு கால வரலாற்றைக் கொண்ட நதி அரிப்பை, வாடியா இமாலயா புவியமைப்பியல் நிறுவனம் வெளிப்படுத்தி உள்ளது

Posted On: 30 APR 2020 3:25PM by PIB Chennai

இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் தன்னாட்சி நிறுவனமான வாடியா இமாலயா புவியமைப்பியல் நிறுவனத்தில் (WIHG), இருந்து விஞ்ஞானிகளும் மாணவர்களும் லடாக் இமாலயப் பகுதிகளில் நதிகள் குறித்து ஆய்வு செய்தனர்.  35 ஆயிரம் ஆண்டு கால வரலாற்றைக் கொண்ட நதி அரிப்பு குறித்த தகவல்களை இந்த ஆய்வின் மூலம் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளதோடு அரிப்புக்கு உள்ளான முக்கியமான பகுதிகளையும் அடையாளம் கண்டறிந்து உள்ளனர். மேலும் பரந்துபட்ட சமவெளிகள் அரிப்பு தாங்கு மண்டலங்களாகச் செயல்பட்டுள்ளதையும் கண்டறிந்துள்ளனர்.  இந்த ஆய்வானது வறண்ட லடாக் இமாலயப்பகுதியில் நதிகள் நீண்டகால இடைவெளிகளில் எவ்வாறு இயங்கின என்பதை எடுத்துக்காட்டுகின்றன. மாறுபடும் பருவநிலை மாறுதல்களுக்கு நதிகள் எவ்வாறு பதில்வினை ஆற்றின என்பதையும், நீர் மற்றும் வண்டல் வழித்தடம் ஆகியவற்றையும் இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.  பொலிவுறு நகரங்களை உருவாக்குவதிலும் அதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதிலும் நாடு ஈடுபட்டுள்ள நிலையில், இந்த ஆய்வானது முக்கியமானதாக விளங்குகிறது. 

 



(Release ID: 1619702) Visitor Counter : 110