அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

நிலைமின்னியல் கிருமிநாசினி தெளிப்புத் தொழில்நுட்பத்தை வர்த்தக ரீதியில் பயன்படுத்த அனுமதி.

Posted On: 29 APR 2020 12:44PM by PIB Chennai

கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில், சிறப்பான முறையில் கிருமிநாசினி தெளிக்கவும், சுகாதாரத்தைப் பேணவுமாக புத்தாக்கத் தொழில்நுட்பத்தை சண்டிகரில் உள்ள மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் குழுமத்தின் மத்திய அறிவியல் கருவிகள் அமைப்பு (Council of Scientific & Industrial Research - Central Scientific Instruments Organization - CSIR-CSIO) உருவாக்கியுள்ளது. இதனை வர்த்தகமயமாக்கவும், மிகப்பெரும் அளவில் உற்பத்திசெய்யவும் இந்தத் தொழில்நுட்பத்தை நாக்பூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ரைட் வாட்டர் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு CSIR-CSIO வழங்கியுள்ளது. கொரோனாவைரஸ் மற்றும் நோய்க்கிருமிகள் பரவுவதை இந்தத் தொழில்நுட்பம் சிறப்பான முறையில் தடுப்பதுடன் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக CSIR-CSIO விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நிலைமின்னியல் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு நிலைமின்னியல் கிருமிநாசினித் தெளிப்பு இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நுண்உயிர்கள் மற்றும் வைரஸ்களை அழிப்பதற்காக 10 முதல் 20 மைக்ரோமீட்டர் வரை ஒரே சீரான அளவிலும், சிறப்பான துளிகளாகவும் கிருமிநாசினியை இது தெளிக்க வைக்கிறது.


(Release ID: 1619240) Visitor Counter : 273