புவி அறிவியல் அமைச்சகம்

இந்தியப் பெருங்கடலின் வடக்குப் பகுதியில் உருவாகும் வெப்பமண்டல புயல்களுக்கான பெயர்களின் புதிய பட்டியல்

Posted On: 28 APR 2020 7:33PM by PIB Chennai

உலக அளவில் வெப்பமண்டல சூறாவளிகள் குறித்த அறிவுரைகளை வழங்குவது, அவற்றுக்குப் பெயர் சூட்டுவது ஆகியவற்றுக்கான அதிகாரம்  பகுதியளவில் தனித்தன்மை வாய்ந்த ஆறு வானிலை மையங்களுக்கும் மற்றும் பகுதியளவிலான வெப்பமண்டல சூறாவளி எச்சரிக்கை மையங்கள் ஐந்துக்கும் வழங்கப்பட்டுள்ளது. பகுதியளவில் தனித்தன்மை வாய்ந்த ஆறு வானிலை மையங்களில் ஒன்றாக இந்திய வானிலை ஆராய்ச்சித் துறை திகழ்கிறது. உலக அளவிலான வானிலை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஆசிய – பசிஃபிக் பகுதிகளுக்கான பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தின் கீழ் அதன் உறுப்பு நாடுகளான வங்கதேசம், இந்தியா, ஈரான், மாலத்தீவுகள், மியன்மர், ஓமன், பாகிஸ்தான், கத்தார், சவூதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபுக் குடியரசுகள் மற்றும் ஏமன் ஆகிய 13 நாடுகளுக்கான வெப்பமண்டல சூறாவளி மற்றும் புயல் உருவாக்கம் ஆகியவை குறித்த அறிவுரைகளை வழங்கும் மையமாகவும் இந்திய வானிலை ஆராய்ச்சித் துறை விளங்குகிறது. புதுதில்லியில் இருந்து செயல்படும் பகுதியளவில் தனித்தன்மை வாய்ந்த வானிலை மையம் வங்காள விரிகுடா மற்றும் அரபிக் கடல் ஆகிய இந்தியப் பெருங்கடலின் வடக்குப் பகுதியில் உருவாகும் வெப்பமண்டல சூறாவாளிகளுக்கு பெயர் சூட்டும் அதிகாரம் பெற்றதாகவும் விளங்குகிறது.

வெப்பமண்டல சூறாவளிகளுக்கு இவ்வாறு பெயர் சூட்டுவதென்பது அறிவியல் துறையைச் சார்ந்தவர்கள், பேரழிவுக்கால நிர்வாகத்தை மேற்கொள்வோர், ஊடகத் துறையினர், பொதுமக்கள் ஆகியோருக்கு

  • ஒவ்வொரு சூறாவளியையும் தனித்து அடையாளம் காணுவது;
  • அத்தகைய சூறாவளி எவ்வாறு உருப்பெற்று வருகிறது என்பதைப் பற்றிய புரிதலை உருவாக்குவது;
  •  ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரே நேரத்தில் உருவாகக் கூடுமானால் அவை குறித்த குழப்பத்தை அகற்றுவது;
  • ஒவ்வொரு வெப்பமண்டல சூறாவளியையும் எளிதாக நினைவில் கொள்வது;
  • விரிவான பகுதி மக்களுக்கு இத்தகைய சூறாவளி குறித்த எச்சரிக்கைகளை துரிதமாகவும், சிறப்பாகவும் வழங்குவது உதவி செய்வதாக அமைகிறது.


(Release ID: 1619209) Visitor Counter : 388