வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

கோவிட்-19 தொற்று பரிசோதனை மாதிரிகளைத் திரட்ட நடமாடும் மையம் : அகர்தலா பொலிவுறு நகரம் பயன்படுத்துகிறது

Posted On: 28 APR 2020 5:18PM by PIB Chennai

அகர்தலா பொலிவுறு நகரம் கோவிட்-19 பரிசோதனைக்கான மாதிரிகளைத் திரட்ட நடமாடும் நிலையத்தை வடிவமைத்து தலைமை மருத்துவ அதிகாரியிடம் வழங்கியுள்ளது. மாதிரிகளை சேகரிக்கும் மருத்துவரின் பாதுகாப்பை உறுதி செய்வதாகவும், பிபிஇ எனப்படும் அவரது தனிநபர் பாதுகாப்பு உபகரணம் சேதமடையாமல் தவிர்க்கும் வகையிலும் இந்த நடமாடும் நிலையம் உள்ளது. அகர்தலாவின் கோவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் இது மிகப்பெரிய முன்முயற்சியாகும்.

மூன்று சக்கர வாகனத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த நிலையம், குறுகிய சந்துகளுக்குள்ளும் எளிதாகச் செல்லக்கூடியது. சமுதாயத்தினரிடம் இருந்து மாதிரிகளைச் சேகரிக்க இது உதவுகிறது. பரிசோதனைக்கு மாதிரிகளை வழங்க  நோயாளிகள் மருத்துவமனைக்கு வரவேண்டிய அவசியம் இல்லை. குறைந்த நேரத்தில் அதிகமான பேரிடம் சோதனை செய்வதற்கு இது உதவிகரமாக உள்ளது. அகர்தலா பொலிவுறு நகரத்தின் தலைமை செயல் அதிகாரியான, மாநகராட்சி ஆணையர் இந்த முன்முயற்சியை மேற்கொண்டுள்ளார்.



(Release ID: 1619046) Visitor Counter : 221