அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
கொவிட்-19, மைய நரம்பு மண்டலத்தை பாதித்து நுகரும் உணர்ச்சியையும், சுவை உணர்ச்சியையும் செயலிழக்க செய்யலாம் என்று ஆய்வு கூறுகிறது.
Posted On:
26 APR 2020 6:31PM by PIB Chennai
கொவிட்-19 வைரசான சார்ஸ்-கொவி-2வின் நரம்புகளின் ஊடுருவும் தன்மையை ஆய்வு செய்த ஜோத்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தை (ஐஐடி) சேர்ந்த விஞ்ஞானிகள், இந்த கிருமியினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் வாசனை நுகரும் தன்மையையும், சுவை உணர்ச்சிகளையும் இழப்பதால், அவர்களது ஒட்டுமொத்த மைய நரம்பு மண்டலமும், மூளையின் அடிப்படை அமைப்புகளும் வைரஸ் தொற்றின் பாதிப்புக்கு மிகவும் ஆளாகி பேரழிவு தரும் விளைவுகளை உண்டாக்கலாம் என்கின்றனர்.
மூக்கும் வாயும் தான் இந்த வைரசின் முக்கிய நுழைவுப் பகுதிகள் என்பதால் நுகரும் மற்றும் சுவைக்கும் உணர்ச்சிகள் பாதிக்கப்படுவதாக கூறியுள்ள டாக்டர். சுரஜித் கோஷும் அவரது குழுவும், பின்னர் அது நரம்பணுக்களையும், சளியையும் பயன்படுத்தி மெதுவாக நுகரும் மண்டலத்துக்குள் செல்வதாகக் கூறியுள்ளனர்.
***
(Release ID: 1618619)
Visitor Counter : 192