புவி அறிவியல் அமைச்சகம்

தெற்கு அந்தமான் கடல், அதன் அருகமைப் பகுதிகளில் 30 ஏப்ரல் 2020 வாக்கில் காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாக வாய்ப்பு

Posted On: 26 APR 2020 6:26PM by PIB Chennai

தெற்கு அந்தமான் கடல், அதன்  அருகமைப் பகுதிகளில் 30 ஏப்ரல் 2020 வாக்கில் காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாக வாய்ப்பு உள்ளதாக பல்வேறு வானிலை ஆய்வு நிலையங்களின் வழிகாட்டுதல்கள் மற்றும் சுற்றுச்சூழல், வெப்பச் சலன சூழ்நிலைகள் தெரிவிக்கின்றன.

அதற்கடுத்த 48 மணி நேரத்தில் அது வலுப்பெற்று, வடக்கு - வடமேற்கு திசையில் ஆரம்பத்தில் நகர்ந்து, பிறகு வடக்கு - வட கிழக்கு திசையில் அந்தமான் நிகோபர் தீவுகளை ஒட்டியும், தள்ளியும் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் 30 முதல் மே 3 ஆம் தேதி வரையில் இவை நிகழ வாய்ப்பு உள்ளது.

வானிலை நிலவரம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு இதுபற்றிய தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருவதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் புயல் எச்சரிக்கைப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்தத் தாழ்வுநிலையின் காரணமாக, அந்தமான் நிகோபர்  தீவுகள் பகுதியிலும், அருகில் உள்ள கடல் பகுதிகளிலும் வானிலையில் மோசமான தாக்கம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.



(Release ID: 1618616) Visitor Counter : 156