எரிசக்தி அமைச்சகம்
லே மற்றும் தில்லியில் ஹைட்ரஜன் எரிபொருள் பேருந்து, மகிழுந்துகளை இயக்கும் திட்டத்தை தேசிய அனல் மின் கழகம் அறிமுகப்படுத்துகிறது: உலக அளவில் விருப்பம் உள்ளோருக்கு அழைப்பு
प्रविष्टि तिथि:
26 APR 2020 2:42PM by PIB Chennai
இந்தியாவில், மிகப் பெரும் அளவில் மின் உற்பத்தி செய்யும் நிறுவனமான, மத்திய மின் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய பொதுத்துறை நிறுவனமான தேதிய அனல் மின கழக நிறுவனம், ஹைட்ரஜன் எரிபொருள் செல்களை அடிப்படையாகக் கொண்ட, பத்து மின்சார பேருந்துகளையும், இதே அளவிலான மின்சார மகிழுந்துகளையும் லே மற்றும் தில்லியில் அறிமுகப்படுத்துவதற்காக, உலக அளவில் விருப்பம் உள்ளோருக்கு அழைப்பு விடுத்துள்ளது.
தேதிய அனல் மின கழக நிறுவனத்திற்குச் சொந்தமான துணை நிறுவனமான என்டிபிசி வித்யுத் வ்யாபார் நிகாம் (NVVN) லிமிடெட் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஹைட்ரஜன் எரிபொருள் செல்களை அடிப்படையாகக் கொண்ட வாகனங்களை வாங்குவதற்கான திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது, நாட்டில் இதுவே முதல் முறையாகும். ஹைட்ரஜன் எரிபொருள் செல்களை அடிப்படையாகக் கொண்ட இந்த வாகனங்களில், முற்றிலும், இயற்கையை அடிப்படையாகக் கொண்ட முழுமையான பசுமையான எரிசக்தித் தீர்வு தயாரிக்கப்படவுள்ளது.
புதிய மற்றும் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி துறை அமைச்சகத்தின் ஆதரவுடன் மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி, புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி மூலமாக ஹைட்ரஜனை உற்பத்தி செய்வது பற்றியும், ஹைட்ரஜனை சேமித்து வைப்பது, விநியோகிப்பது ஆகியவற்றுக்கான வசதிகளை ஏற்படுத்துவது ஆகியவற்றையும் லே மற்றும் தில்லியில் பரிசோதனை அளவிலான திட்டங்களின் ஒரு பகுதியாக மேற்கொள்ளும். போக்குவரத்து பிரிவில் கார்பன்களற்ற நிலையை ஏற்படுத்துவதே ஹைட்ரஜன் அடிப்படையிலான வாகனங்களை அறிமுகப்படுத்துவதற்கான திட்டத்தின் நோக்கமாகும்.
(रिलीज़ आईडी: 1618417)
आगंतुक पटल : 351