தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

கொரோனா சஹாயதா திட்டத்தின் கீழ் அரசு ரூ.1000 வழங்குவதாக வாட்ஸ்அப்பில் வெளியான செய்தி தவறானது

Posted On: 25 APR 2020 9:37PM by PIB Chennai

பத்திரிகை தகவல் அலுவலகத்தின் உண்மை கண்டறியும் குழு, இந்திய அரசு, கொரோனா சஹாயதா திட்டதின் கீழ், எவருக்கும் ரூ.1000 வழங்கவில்லை என்று இன்று டுவிட்டர் பதிவில் தெளிவுபடுத்தியுள்ளது. அரசு  WCHO என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளதாகவும், அத்திட்டத்தின் கீழ், மக்கள் அனைவருக்கும் ரூ.000 வழங்கப்படுவதாகவும் வாட்ஸ்ஆப் செயலியில் வெளியான ஒரு தகவலுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், இந்த டுவிட்டர் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் ஒரு இணைப்பை கிளிக் செய்து தகவல்களைத் தெரிவிக்கலாம் என அந்தப் பதிவு தெரிவிக்கிறது.

இந்தத் தகவலும், அதிலுள்ள இணைப்பும் மோசடியானவை என்று விளக்கம் அளித்துள்ள டுவிட்டர் பதிவு, மக்கள் இதை நம்பி அந்த இணைப்பை கிளிக் செய்யவேண்டாம் என எச்சரிக்கை செய்துள்ளது.

 



(Release ID: 1618368) Visitor Counter : 175