அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

செயல்மிகு மருத்துவப் பொருள்கள் மற்றும் இடைநிலை மருந்துகள் மீதான சார்பு நிலையைக் குறைப்பதற்கான, அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம்-இந்திய வேதியியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் முயற்சிகள்.

Posted On: 25 APR 2020 3:41PM by PIB Chennai

எதிர்பார்க்கும் விளைவுகளை ஏற்படுத்தும் எந்த ஒரு மருந்துக்கும், செயல்மிகு மருத்துவப் பொருள்களும், இடைநிலை மருந்துகளும் முக்கிய கூறுகள் ஆகும். செயல்மிகு மருத்துவப் பொருள்கள் மற்றும் இடைநிலை மருந்துகளின் விநியோகத்துக்கு இந்தியா, சீனாவையே பெரிதும் நம்பியுள்ளது. தற்போது, இந்திய வேதியியல் தொழில்நுட்ப நிறுவனம், ஹைதராபாத், ஹைதராபாத்தைச் சேர்ந்த இன்னொரு ஒருங்கிணைந்த மருந்து நிறுவனமான, லக்ஸாய் லைஃப் சயின்சஸுடன், செயல்மிகு மருத்துவப் பொருள்கள் மற்றும் இடைநிலை மருந்துகளின் உருவாக்கம் மற்றும் தயாரிப்புக்காக இணைந்துள்ளது. இந்திய மருந்துகள் துறை மேற்கண்ட பொருள்களுக்காக சீன இறக்குமதிகளை நம்பி உள்ளதை இந்த முயற்சி குறைக்கக் கூடும்.

அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் கீழ் உள்ள ஒரு ஆய்வகமான இந்திய வேதியியல் தொழில்நுட்ப நிறுவனம், லக்ஸாய் உடன் இணைந்து, கொரோனா வைரசுக்கு எதிரான போரில் பயன்படுத்தப்படும் மருந்துகளின் தொகுப்பு மீது பணியாற்றி வருகிறது. உமிஃபெனோவிர், ரெம்டெசிவிர் மற்ற்றும் ஹைட்ராக்ஸி  குளோரோகுயினின் ஒரு முக்கிய இடைநிலை மீது இந்த கூட்டுமுயற்சி முதன்மையான கவனத்தை செலுத்தும்.

***


(Release ID: 1618194) Visitor Counter : 226