தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
தேசிய சாலைப் போக்குவரத்து கட்டமைப்பு மூலம் 22 வழித்தடங்களில் 500 கி.மீட்டருக்கும் மேற்பட்ட தூரத்துக்கு அத்தியாவசியப் பொருள்களை அஞ்சல் துறை விநியோகிக்க உள்ளது
प्रविष्टि तिथि:
24 APR 2020 7:25PM by PIB Chennai
கொவிட்-19 பரவலைத் தடுக்க மேற்கொள்ளப்பட்டுள்ள பொது ஊரடங்கு சூழல் காரணமாக, பயணிகள் விமானங்கள், ரயில்கள், மாநில சாலைப் போக்குவரத்து ஆகியவற்றின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளதால், நாட்டின் அத்தியாவசியப் பொருள்கள் விநியோகச் சங்கிலி தடைபட்டுள்ளது. இந்த நெருக்கடியான சூழலில், அஞ்சல் துறை இதுபற்றி சிந்திக்க வேண்டும் என்று அஞ்சல் துறையின் மூத்த அதிகாரிகளிடம் உரையாற்றிய மத்திய தொலைத் தொடர்பு, மின்னணு, தகவல் தொழில்நுட்பம், சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் திரு. ரவிசங்கர் பிரசாத் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த ஊக்குவிப்பின் பயனாக, நகரங்களுக்குள் அஞ்சல் விநியோகத்துக்காக பயன்படுத்தப்படும் துறையின் வாகனங்களைக் கொண்டு சாலைகள் வழியாக தொடர்புகளைத் தொடங்கும் சிந்தனை உதித்தது. இதன்படி, நாட்டில் 75க்கும் மேற்பட்ட நகரங்களைத் தொட்டுச் செல்லும் 500 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் கொண்ட 22 வழித்தடங்களில், மாநிலங்களுக்கு இடையேயும், மாநிலங்களுக்கு உள்ளேயும் செல்லக்கூடிய வகையில் தேசிய சாலைப் போக்குவரத்துத் தொடர்பு அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்களைக் கொண்ட பொதிகளை நாட்டில் எந்தப் பகுதியிலும் அஞ்சல் துறை விநியோகிக்க இயலும் என்பதால், இந்த முன்முயற்சி, நாட்டுக்குள் அத்தியாவசியப் பொருள்கள் போக்குவரத்தை தற்போது உறுதி செய்யும்.
(रिलीज़ आईडी: 1618128)
आगंतुक पटल : 147