அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
கோவிட் 19 நோய் கண்டறிவதற்கான பிசிஆர் PCR மற்றும் LAMP லேம்ப் சோதனைகளுக்காக காந்த, நேனோ துகள் அடிப்படையிலான, RNA பிரித்தெடுக்கும் கிட் ஒன்றை ஸ்ரீ சித்திர திருநாள் நிறுவனம் தயாரித்துள்ளது
Posted On:
24 APR 2020 6:29PM by PIB Chennai
கோவிட் 19 நோய் உள்ளதா என்பதைக் கண்டறிவதற்கான பரிசோதனை செய்வதற்காக எடுக்கப்படும் மாதிரிகளில் இருந்து RNAவைத் தனியாக பிரித்தெடுப்பதற்கான புதிய தொழில்நுட்பத்திலான, சித்ரா மேக்னா என்று பெயரிடப்பட்டுள்ள ஆர்என்ஏ பிரித்தெடுக்கும் கிட் ஒன்றை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பான ஸ்ரீ சித்திரத் திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் தயாரித்துள்ளது
கோவிட் 19 நோயின் வைரஸுக்குக் காரணியான SARS-COV-2 வைரஸ், ஆர்என்ஏ வைரஸ் ஆகும். இது, ஒரு உயிரினம், உயிர் வாழ்வதற்கு தேவையான மரபணு தகவல்களை கொண்டு செல்லும் அனைத்து உயிரணுக்களுக்குள்ளும் நீளமான ஓர் இழை கொண்ட பாலிமரிக் பொருளாகும்.
தொண்டையிலிருந்து அல்லது மூக்கிலிருந்து எடுக்கப்படும் மாதிரியில் உள்ள வைரஸில், ஆர்என்ஏ உள்ளதா என்பதை உறுதி செய்வது, இந்த வைரஸைக் கண்டறிய உதவும். நோய் உள்ளதா என்று கண்டறிவதற்காக சேகரிக்கப்பட்ட மாதிரி, இதற்கென குறிப்பிடப்பட்ட சூழல்களில், வைரல் போக்குவரத்து மீடியம் மூலமாக சோதனைக் கூடத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
LAMP லேம்ப் சோதனைக்காக மட்டுமல்லாமல் RT PCR ஆர்டி பி சி ஆர் சோதனைக்காகவும், நோயாளிகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் இருந்து, அதிகபட்ச தூய்மை கொண்ட ஆர்என்ஏக்களைப் பிரித்தெடுப்பதற்கு சித்ரா மேக்னா பயன்படுத்தப்படும்.
அதிகபட்ச தரம் கொண்ட, அதிக அளவில் உள்ள ஆர்என்ஏ க்களை, தரம் குறையாமல் பிரித்தெடுப்பது என்பது பிசிஆர் அல்லது லேம்ப் சோதனைகளில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்த சோதனைகளில் ஆர் என் ஏ, டிஎன்ஏ-வாக மாற்றப்படுகிறது. ஒரு சில இந்தியத் தயாரிப்புகளைத் தவிர, பெரும்பாலான RNA பிரித்தெடுக்கும் கிட்டுகள் இறக்குமதி செய்யப்படுபவை. நாட்டில் பெரும் எண்ணிக்கையில் RT PCR சோதனைகளை மேற்கொள்வதற்கு, அதிக அளவில் கிட்டுகள் கிடைக்காமல் இருப்பது, மிகுந்த சிரமத்தையளிக்கும்.
(Release ID: 1617943)
Visitor Counter : 176