விவசாயத்துறை அமைச்சகம்

மத்திய வேளாண் துறை அமைச்சர், மத்திய வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறை, இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் பணிகளை சீராய்வு செய்தார்.

Posted On: 23 APR 2020 8:55PM by PIB Chennai

மத்திய வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறை (Department of Agricultural Research & Education - DARE) மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (Indian Council of Agricultural Research - ICAR) ஆகியவற்றின் சீராய்வுக் கூட்டத்தை இன்று மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர் நடத்தினார்.

1243 விவசாயப் பயிர் வகைகளையும், 345 தோட்டக்கலைப் பயிர் வகைகளையும் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் 2014-19ஆம் ஆண்டு காலத்தில் கண்டுபிடித்துள்ளது. இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் பல்வேறு பயிர் வகைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் அந்நியச் செலாவணியை ஈட்டுவதற்கும், நாட்டின் உணவுப் பாதுகாப்புக்கும் பங்களித்துள்ளது.

 

 

 

 

கிரிஷி கல்யாண் அபியான், ஜல்சக்தி அபியான், மரம் நடுதல் குறித்த விழிப்புணர்வு,  சர்தேச மகளிர் தினக்  கொண்டாட்டம் போன்ற அரசின் பல்வேறு சிறப்புப் பிரசாரங்களில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் வேளாண் அறிவியல் மையங்கள் (Krishi Vigyan Kendras - KVKs) முக்கிய பங்களிப்பை செய்துள்ளன. வேளாண் தொழில்நுட்பங்களை விவசாயிகள் கற்றுக்கொள்வதன் மூலம் வேளாண் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கு உதவும் கிரிஷி கல்யாண் அபியான் (Krishi Kalyan Abhiyan) திட்டம், நாட்டில் முன்னேறத் துடிக்கும் 112 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை, கிரிஷி கல்யாண் திட்டத்தில் 2 கட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.   11.05 லட்சம் விவசாயிகள் வேளாண் அறிவியல் மையங்கள் மூலம் பயிற்சி பெற்றுள்ளனர். மேலும், விவசாயிகளின் வயல்வெளிகளிலேயே செயல்முறை விளக்கம் 5,000 முறை அளிக்கப்பட்டுள்ளது. கிரிஷி கல்யாண் அபியான் திட்டத்தின் மூன்றாவது கட்டத்தில், 17 லட்சம் விவசாயிகளுக்கு, வருவாயை இரட்டிப்பாக்கும் பன்முகப்படுத்தப்பட்ட விவசாய முறைகள் குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

அதிகபட்சமாக 14 லட்சம் குவிண்டால் விதைகள் மற்றும் 2,425 லட்சம்  நடுதலுக்குரிய பொருள்கள் ஆகியவை வேளாண் அறிவியல் மையங்களால் தயாரிக்கப்பட்டுள்ளன. மேலும், பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கான  512 லட்சம் தரமான நடுதலுக்குரிய பொருள்கள் வேறு பல நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த விதைகள் மற்றும் நடுதலுக்குரிய பொருள்கள் விவசாயிகளுக்கு மிகக்குறைந்த விலையில் அளிக்கப்படுகின்றன. 2014-19ஆம் ஆண்டு காலத்தில் வேளாண் அறிவியல் மையங்கள் 26.85 கோடி விவசாய அறிவுறுத்தல்களை விவசாயிகளின் கைபேசிகளுக்கு அனுப்பியுள்ளன.



(Release ID: 1617747) Visitor Counter : 145