அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

அறிவியல், தொழில்நுட்ப இடையீடுகளின் துணையுடன், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை ஆதரவு பெற்ற அரசு சார்பற்ற அமைப்புகளின் கட்டமைப்பு, கொவிட்-19ஐ சமூக அளவில் சமாளிக்கிறது.

प्रविष्टि तिथि: 22 APR 2020 5:37PM by PIB Chennai

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் பிரிவான சமமான அதிகாரம் மற்றும் வளர்ச்சிக்கான அறிவியலின் (Science For Equity Empowerment and Development - SEED) ஆதரவு பெற்ற, இந்தியாவின் 22 மாநிலங்களில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வலுப்பெற்ற அரசு சார்பற்ற அமைப்புகளின் கட்டமைப்புகள், பல்வேறு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இடையீடுகள் மூலம் கொவிட்-19 கட்டுப்படுத்தவும், பல்வேறு மாநிலங்களிலும் அதற்கும் கீழுள்ள நிலைகளிலும் அரசின் முயற்சிகளுக்கு உதவி செய்திடவும் தங்கள் திறன்களை வெளிப்படுத்தியுள்ளன.

முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகத்தின் வழிகாட்டுதல்களுக்கு இணங்கி, தோராயமாக 1,20,000 முகக்கவசங்கள் இந்திய அரசுக்காகத் தயாரிக்கப்பட்டு, அவை கொவிட்-19 பாதிப்பு அதிகமுள்ள ஆந்திரப்பிரதேசம், தில்லி, குஜராத், ஹிமாச்சல் பிரதேசம், கர்நாடகா, கேரளா, மத்தியப்பிரதேசம், மாகாராஷ்டிரா, மணிப்பூர், ராஜஸ்தான், உத்தரகாண்ட், உத்திரப்பிரதேசம், தமிழ்நாடு, தெலங்கானா, திரிபுரா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கும் இதர இடங்களுக்கும், 30 அரசு சார்பற்ற அமைப்புகள் மற்றும் சமுதாயம் சார்ந்த அமைப்புகளைக் கொண்ட கட்டமைப்பின் மூலம் விநியோகிப்பட்டன. அரசு சார்பற்ற அமைப்புகளின் வலைப்பின்னலைச் சேர்ந்த இதர உறுப்பினர்களும் இதைத் தொடருமாறு பணிக்கப்பட்டுள்ளனர்.

புதுமையான திறமூல வடிவமைப்பின் மூலம் தயாரிக்கப்பட்ட முப்பரிமாண அச்சிடப்பட்ட முகக்கவசங்கள் மகாராஷ்டிராவில் உள்ள 2500 காவல் துறையினருக்கும், முன்னிலை சுகாதாரப் பணியாளர்களுக்கும் வழங்கப்பட்டன.

வரும் இரு வாரங்களில் 3,00,000 முகமூடிகள், 3,000 முகக்கவசங்கள், 15,000 லிட்டர்கள் கிருமி நாசினி மற்றும் 5,000 லிட்டர்கள் கை கழுவும் திரவம் ஆகியவற்றைத் தயாரிப்பதற்கான  வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. மாநில ஊரக வாழ்வாதாரத் திட்டத்தையும் ஈடுபடுத்தி, பெண்கள் சுய உதவிக்குழுக்கள், விவசாய மன்றங்கள் மற்றும் இளைஞர்களை ஒன்று திரட்டுவதன் மூலம் இந்தப் பொருள்கள் விநியோகிக்கப்படுகின்றன. அரசு சார்பற்ற அமைப்புகளின் கட்டமைப்புகள் மூலம் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு அவசியமான இந்த இடையீடுகள் குறித்து விழிப்புணர்வும், சமுகங்களின் திறனும் கட்டமைக்கப்படுகின்றன

***


(रिलीज़ आईडी: 1617451) आगंतुक पटल : 213
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Gujarati , Urdu , हिन्दी , Punjabi , Telugu , Kannada