சுற்றுலா அமைச்சகம்
“இந்தியாவை அனைத்து வசதிகளையும் கொண்ட அனைவருக்குமான பயண இடமாக மாற்றுவது” என்ற தலைப்பில், சுற்றுலா அமைச்சகம் ”Dekho Apna Desh” -இன் 6வது வலைதளத்h தொடரை, வெளியிடுகிறது.
Posted On:
23 APR 2020 12:44PM by PIB Chennai
இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகம், ‘Dekho Apna Desh’ என்ற தலைப்பில் வலைதளத் தொடர் வரிசைகளை ஏற்பாடு செய்து வருகிறது. இந்த வலைத்தளத் தொடரின் நோக்கம் இந்தியாவின் பல்வேறு சுற்றுலாத்தலங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், ஊக்குவிப்பதும் ஆகும் - அதிகம் அறியப்படாத இடங்கள் மற்றும் பிரபலமான இடங்களின் அதிகம் வெளியில் தெரியாத சிறப்பு அம்சங்களைத் தெரிவிப்பதும் இதில் அடங்கும். கூடுதலாக, மக்கள் எளிதில் அணுகக்கூடிய சுற்றுலா போன்ற தலைப்புகளிலும் வலைத்தளத்தொடர்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. ‘இந்தியாவை அனைத்து வசதிகளையும் கொண்ட பயண இடமாக அனைவருக்குமானதாக மாற்றுவது’ என்ற தலைப்பில், இந்தத் தொடரின் ஆறாவது வலைத்தளத் தொடர், ஏப்ரல் 22, 2020ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தத் தொடரை உலகம் முழுவதிலுமிருந்து 1700க்கும் மேற்பட்டோர் நேரடியாகக் கேட்டனர்.
இந்தத் தொடரில், மாற்றுத் திறனாளிகளும் கூட இந்தியாவின் பல்வேறு இடங்களுக்குப் பயணம் செய்தது குறித்து விளக்குகிறது. பண்டைய நகரமான வாரணாசியில் இருந்து, கங்கை நதியில் படகில் சவாரி செய்தவாறு மலைகளை ரசித்துக் கொண்டே, குல்மார்க்கின் பனிச்சரிவுகள் வரை பிரயாணிப்பது, பிறகு அமிர்தசரஸில் உள்ள ஹர்மந்திர் சாஹிப் கோயில் (பொற்கோயில்) முதல் தர்மஷாலாவில் உள்ள தலாய் லாமா மடம் வரை பயணிப்பது என நீள்கிறது. மேலும் ஜெய்சால்மர் கோட்டையில் இருந்து ரிஷிகேஷ் வரையிலும், கேரளாவின் உப்பங்கழிகள் முதல் கர்நாடகாவின் தேசிய பூங்காக்கள் வரை ஆறுகளில் படகு சவாரி செய்வது பற்றியும் விரிவாக விளக்குகிறது. அதுமட்டுமன்றி, செவித்திறன் குறைபாடுள்ள தம்பதியராகவோ அல்லது பார்வைக் குறைபாடுள்ள தம்பதியராகவோ, சக்கர நாற்காலிகளில் பயணிப்பவர்களாகவோ, குழுக்களாகவோ அல்லது உலகம் முழுவதிலுமிருந்து தனியாகப் பயணித்து வந்திருந்தாலும், இந்த இடங்கள் அனைத்தையும் அவர்களால் எளிதில் சுற்றிப் பார்க்குமளவுக்கு பயணிகளுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த வலைத்தளத் தொடர் இந்தியாவில் அனைவரும் எளிதில் அணுகக்கூடிய பயணத்திற்கான முடிவற்ற சாத்தியங்களை விளக்குகிறது. இந்தியாவின் பல்வேறு சுற்றுலாத் தளங்களில் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு கிடைக்கக்கூடிய வசதிகள் மற்றும் அவர்களுக்கான பயணத்தைத் திட்டமிடும் போது மனதில் கொள்ள வேண்டிய முக்கிய தகவல்களும் இந்தத் தொடரில் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
**********
(Release ID: 1617450)
Visitor Counter : 156