பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்

2020 மார்ச் மாதத்திற்கான மாதாந்திர உற்பத்தி அறிக்கை

Posted On: 23 APR 2020 10:13AM by PIB Chennai

1. கச்சா எண்ணெய்

2020 மார்ச் மாதத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தி 2697.42 ஆயிரம் மெட்ரிக் டன்கள் (TMT) அளவாக இருந்தது. இது இலக்கைக் காட்டிலும் 13.97 சதவீதம் குறைவு, 2019 மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 5.50 சதவீதம் குறைவு. 2019-20இல் ஏப்ரல் முதல் மார்ச்  வரையிலான காலத்தில் மொத்த கச்சா எண்ணெய் உற்பத்தி  32169.27 ஆயிரம் மெட்ரிக் டன்கள் (TMT)  ஆக இருந்தது. இது இலக்கைவிட 8.20 சதவீதம் குறைவு, முந்தைய ஆண்டைவிட 5.95 சதவீதம் குறைவு.

2. இயற்கை எரிவாயு

2020 மார்ச் மாதத்தில் இயற்கை எரிவாயு உற்பத்தி 2411.16 MMSCM (Million Metric Standard Cubic Meters) அளவாக இருந்தது. இது மாதத்திற்கான இலக்கைவிட 21.89 சதவீதம் குறைவு. 2019 மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 14.38 சதவீதம் குறைவு. 2019-20ல் ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான காலத்தில் மொத்த உற்பத்தி 31179.96 MMSCM (Million Metric Standard Cubic Meters) ஆக இருந்தது. இது இலக்கைவிட 9.76 சதவீதம் குறைவாகவும், முந்தைய ஆண்டைவிட 5.15 சதவீதம் குறைவாகவும் இருந்தது.

3. சுத்திகரிப்பு உற்பத்தி (சுத்திகரிப்பு செய்த கச்சா எண்ணெய் அளவின் அடிப்படையில்)

2020 மார்ச் மாதத்தில் சுத்திகரிப்பு செய்யப்பட்ட எண்ணெயின் அளவு 21203.58 ஆயிரம் மெட்ரிக் டன் (TMT)  ஆக இருந்தது. இது அந்த மாதத்திற்கான இலக்கைவிட 8.59 சதவீதம் குறைவு. 2019 மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 5.74 சதவீதம் குறைவு. 2019 - 20 ல் ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான காலத்தில் சுத்திகரிப்பு அளவு 254385.82ஆயிரம் மெட்ரிக் டன் (TMT) ஆக இருந்தது. இது இலக்கைவிட 0.14 சதவீதம் குறைவு. முந்தைய ஆண்டைவிட 1.1 சதவீதம் குறைவு.



(Release ID: 1617394) Visitor Counter : 175