திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்

பெருந்தொற்று காலகட்டத்தில் விதிமுறைகளைப் பின்பற்றி அத்தியாவசிய சேவைகளின் கீழ் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளசான்றளிக்கப்பட்ட 900 பிளம்பர்களின் பட்டியலை திறன் இந்தியா வழங்கும்

Posted On: 22 APR 2020 1:50PM by PIB Chennai

கோவிட்-19 நெருக்கடி தொடர்ந்து கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் குடிநீர்க் குழாய்களை சீர் செய்வது போன்ற அத்தியாவசிய சேவைகளின் தேவையை இந்தியன் பிளம்பிங் ஸ்கில்ஸ் கவுன்சில் (IPSC) நன்கு உணர்ந்துள்ளது.  திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைதல் அமைச்சகத்தின் (MSDE), கீழ் செயல்படுத்தப்படும் திறன் இந்தியா திட்டத்தோடு இந்தக் கவுன்சில் ஒருங்கிணைந்து நாடு முழுவதும் ஊரடங்கு உள்ள இந்தக் காலகட்டத்தில் தங்களது சேவையை வழங்க முன்வந்துள்ள 900 பிளம்பர்கள் குறித்த தகவலைத் தயாரித்துள்ளது.  தேவைப்படுபவர்களுக்கு உணவும் இதர அத்தியாவசிய பொருள்களையும் வழங்குமாறு, தன்னோடு இணைந்துள்ள பயிற்சி நிறுவனங்களை, இந்தியன் பிளம்பிங் ஸ்கில்ஸ் கவுன்சில் கேட்டுக் கொண்டுள்ளது மேலும் உணவைத் தயாரித்து அதனை விநியோகிக்கும் நடவடிக்கைகளுக்கு உதவியாக இருக்குமாறும் அந்த நிறுவனங்களை கேட்டுக் கொண்டுள்ளது. 70க்கும் அதிகமான பயிற்சி மையங்கள் உணவு தயாரிக்கும் / தனிமைப்படுத்தி வைக்கும் மையங்களாக மாற்றப்படுவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

கடுமையான இந்தக் காலகட்டத்தில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளின் தேவையைக் கருத்தில் கொண்டு, கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் பிளம்பிங் தொழிலில் ஈடுபடுபவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகளை இந்தியன் பிளம்பிங் ஸ்கில்ஸ் கவுன்சில் தயாரித்து உள்ளது.  இந்தியன் பிளம்பிங் ஸ்கில்ஸ் கவுன்சிலின் தொழில்நுட்ப சிறப்புப் பணிக்குழு இந்த நெறிமுறைகளை ஒருங்கிணைத்துத் தொகுத்துள்ளது.  இந்த வழிகாட்டி நெறிமுறைகளில் செய்யக்கூடிய செயல்கள் மற்றும் செய்யக்கூடாத செயல்கள் எவை எவை என்பது பட்டியிலிடப்பட்டுள்ளதோடு  குடியிருப்புக் கட்டிடங்கள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகள், மருத்துவமனைகள், தனிமைப்படுத்தி வைக்கும் மையங்கள், வர்த்தக வளாகங்கள், இதர நிறுவனங்கள் ஆகியவை உள்ளிட்ட இடம் சார்ந்த முன்னெச்சரிக்கைகளும் அடங்கியுள்ளன. 



(Release ID: 1617154) Visitor Counter : 232