ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

கொரோனா தொற்று காரணமாக பொடு முடக்கக் காலத்திலும் விவசாயிகள் தேவையைப் பூர்த்தி செய்த உரங்கள் விநியோகம்

Posted On: 19 APR 2020 5:40PM by PIB Chennai

கோவிட் 19 எனப்படும் கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கத்தை அடுத்து போக்குவரத்து கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்ட நிலையிலும் விவசாயிகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் உரங்கள் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன. ரயில்வே துறை, மத்திய உரம் மற்றும் ரசாயனத் துறை, மாநில அரசுகள், துறைமுகங்களின் ஒருங்கிணைந்த முயற்சியால் இது சாத்தியமானது. கடந்த வெள்ளிக்கிழமை  ஏப்ரல் 17ம் தேதி அன்று மட்டுமே மொத்த ரயில் பெட்டிகளிலும் உரங்கள் எடுத்து விநியோகம் செய்யப்பட்டன.

இத்தகவலை மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சர் திரு. டி.வி. சதானந்த கவுடா, தனது சுட்டுரையில் (டுவிட்டர்) மூலம் தெரிவித்துள்ளார். “விதை விதைப்பதற்கு முன்பே நமது விவசாயிகளுக்குப் போதிய அளவு உரங்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே அனுப்பப்பட்டுள்ளன. பொதுமுடக்கம் அமலில் உள்ள நேற்று (வெள்ளிக்கிழமை) மட்டும் ஆலைகள், துறைமுகங்கள் ஆகியவற்றிலிருந்து மொத்தம் 41 ரயில் பெட்டிகளில் உரங்கள் அனுப்பப்பட்டுள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.

வழக்கமான காலத்தைப் போலவே வரும் கரீப் பருவ காலத்திலும் விவசாயிகளிடம் தேவையான உரங்கள் கையிருப்பில் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக மத்திய ரசாயன மற்றும் உர அமைச்சகம் மேற்கொண்ட நடவடிக்கையாகும்.



(Release ID: 1616322) Visitor Counter : 231