ரெயில்வே அமைச்சகம்

கோவிட் 19 ஊரடங்கு காலத்தின்போது சரக்குப் போக்குவரத்தில் புதிய உத்திகளை அறிமுகப்படுத்தி, சரக்குப் போக்குவரத்தில் இந்திய ரயில்வே சாதனை

Posted On: 17 APR 2020 6:25PM by PIB Chennai

கோவிட் 19 தொற்று காரணமாக தேசிய அளவிலான பொது முடக்கத்தின்போது அத்தியாவசியப் பொருட்களின் போக்குவரத்தை உறுதிப்படுத்துவதற்காக, நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்படும் சவால்களைச் சமாளிக்க அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக, இந்திய ரயில்வே உணவு தானியம் போன்ற அத்தியாவசியப் பொருட்களை, தனது சரக்கு போக்குவரத்து மூலமாக தொடர்ந்து எடுத்துச் சென்று வருகிறது.

 

வேளாண் விளைபொருட்கள், மாநிலத்துக்கு உள்ளேயும், மாநிலங்களுக்கு இடையேயும் போக்குவரத்து செய்யப்படுவதில் எந்தவிதத் தடையும் இல்லாமல் எடுத்துச் செல்லப்படுவது உறுதி செய்யப்படுகிறது. அத்தியாவசியப் பொருட்களின் பொருள் வழங்கு தொடர் தங்குதடையின்றி பராமரிக்கப்பட வேண்டும் என்பதை உறுதிப் படுத்துவதில் மத்திய அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் இதே காலத்தில் நடைபெற்ற உணவு தானிய சரக்குப் போக்குவரத்தைக் காட்டிலும், இந்த ஆண்டு இதே காலத்தில், அதிகமாக உள்ளது. ஏப்ரல் 1ம் தேதி முதல் 16ம் தேதி வரையிலான காலத்தில் 3.2 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான உணவு தானியங்கள் ஏற்றிச் செல்லப்பட்டன. சென்ற ஆண்டு இதே காலத்தில் இது 1.29 மெட்ரிக் டன்னாக இருந்தது.

 


(Release ID: 1615688) Visitor Counter : 178