அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

பஞ்சாப் ஹோஷியார்பூர் மாவட்டத்தில் பெண்கள் வீட்டிலேயே தயாரிக்கும் முகக்கவசத்துக்கு வரவேற்பு

Posted On: 15 APR 2020 7:28PM by PIB Chennai

பஞ்சாப் மாநிலம் ஹோஷிராபூரில் இளம் பெண்கள் வீட்டில் இருந்தபடியே தரமான முகக்கவசங்களைத் தயாரித்து இலவசமாக விநியோகிக்கிறார்கள். கிராம ஊராட்சித் தலைவர் திரு. நரேந்தர் சிங் தலைமையில் இந்தப் பணி சிறப்பாக நடைபெறுகிறது. கொரோனா தொற்றுநோய் அபாயம் உள்ள சூழலில் இது அப்பகுதி மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இத்திட்டத்தை மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையின் ஆதரவில் செயல்பட்டு வரும் சண்டீகரில் உள்ள பஞ்சாப் மாநில அறிவியல்தொழில்நுட்ப கவுன்சில் செயல்படுத்தி வருகிறது. இந்தக் கவுன்சில் ஹோஷிபூர் மாவட்டத்தில் தல்வாரா உள்ளிட்ட இடங்களில் மகளிருக்கு சாண எரிவாயு உற்பத்தி உள்ளிட்ட தொழில்நுட்ப அதிகாரமளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. “கோவிட் 19” தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் இந்த முகக்கவசம் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

ஊராட்சித் தலைவரின் வழிகாட்டுதலில் பெண்கள் வீட்டிலேயே தயாரித்து வழங்கும் முகக்கவசத்துக்கு பரவலாக நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் பயன்பாட்டை மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். கிருமி தொற்றும் இணைப்பைத் துண்டிப்பதற்கு இந்த முகக் கவசங்கள் பெரிதும் துணை புரியும்என்று அறிவியல் தொழில்நுட்பத் துறை செயலாளர் பேராசிரியர். ஆசுதோஷ் சர்மா தெரிவித்தார்.

இப்பணியில் உற்சாகமாக ஈடுபட்டுள்ள பெண்கள் கடந்த பத்து நாட்களில் தரமான 2000 முகக்கவசங்களைத் தயாரித்துள்ளனர்இவை குக்வால்ஹார் அருகில் உள்ள கிராமங்களில் வசிக்கும் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள், கிராம மக்கள், சிறு பெட்டிக்கடைக்காரர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளன.

(மேலும் விவரங்களை அறிய தொடர்புக்குடாக்டர் இந்து புரி, “எஃப்பிரிவு விஞ்ஞானி. மின்னஞ்சல்: indub.puri[at]nic[dot]in. கைபேசி : 9810557964.



(Release ID: 1614925) Visitor Counter : 191