மத்திய பணியாளர் தேர்வாணையம்

பொது முடக்கத்தைத் தொடர்ந்து தேர்வு அட்டவனை வெளியிட்டது யுபிஎஸ்சி

Posted On: 15 APR 2020 2:59PM by PIB Chennai

கொரோனோ தொற்று பரவலால் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து ஆய்வு செய்ய மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் சிறப்புக் கூட்டம் ஏப்ரல் 15-ம்தேதி நடைபெற்றது.

 

சமூக இடைவெளி உள்ளிட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் நிலவுகின்ற தற்போதைய சூழலில், அவ்வப்போது ஆய்வுக்கூட்டங்களை நடத்த ஏற்கனவே, முடிவெடுக்கப்பட்டது.  அனைத்து நேர்முகத் தேர்வுகள், தேர்வுகள் , நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் தேர்வர்கள் மற்றும் ஆலோசகர்கள் வரவேண்டியதைக் கருத்தில் கொண்டு இந்தக் கூட்டங்களை நடத்தத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதன்படி,  2019- குடிமைப் பணிகளுக்கான ஆளுமைத் தேர்வுகள் பற்றி ,ஊரடங்கின் இரண்டாவது கட்டம் முடிவடைந்த பின்னர்,  இந்த ஆண்டின்  மே மாதம் 3-ம் தேதிக்குப் பின்னர் முடிவெடுப்பது என இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. 2020 குடிமைப் பணித் தேர்வுகள்( முதல்கட்டம்) ,பொறியியல் சேவைகள்  (முதன்மை), புவியியலாளர் சேவைகள் ( முதன்மை) தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன.

 

பொது முடக்கத்திற்குப் பின்னர் நிலவும் சூழலைப் பொறுத்து, தேவைப்படால் இந்தத் தேர்வுகள் தள்ளிவைக்கப்படும் பட்சத்தில், அதுபற்றிய அறிவிப்பு மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) இணையதளத்தில் வெளியிடப்படும்.

 

ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள் தேர்வுகள், இந்திய பொருளாதார சேவை , இந்திய புள்ளியியல் சேவை தேர்வுகள் 2020 தள்ளி வைக்கப்பட்டது குறித்த அறிவிப்புகள் ஏற்கனவே வெளியிடப் பட்டுள்ளன.

 

தேசிய அளவில், நிதி ஆதாரங்களைப் பாதுகாக்கும் அவசியம் குறித்து உணர்ந்து, மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், ஏப்ரல் முதல் ஓராண்டு காலத்துக்கு பெறும் தங்கள்  அடிப்படை சம்பளத்தில் 30 சதவீதத்தை தாங்களாகவே, விட்டுக்கொடுக்க முடிவு செய்துள்ளனர்.



(Release ID: 1614727) Visitor Counter : 314