விவசாயத்துறை அமைச்சகம்

பிரதமர் ஏழைகள் நல் வாழ்வு திட்டத்தின் கீழ் சுமார் 5,516 மெட்ரிக் டன் பருப்பு வகைகள் விநியோகிக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பப்படுகின்றன- வேளாண் துறை நடவடிக்கை

Posted On: 14 APR 2020 7:22PM by PIB Chennai

மத்திய அரசு வேளாண் கூட்டுறவு மற்றும் உழவர் நலத்துறை, பொது முடக்கம் அமலில் இருக்கும் காலத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய நடவடிக்கைகளை தொய்வில்லாமல் நடத்த பல்வேறு  நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் கூடுதல் தகவல்கள் பின் வருமாறு:

  1. நடப்பு ஆண்டு குறுவை சாகுபடியில் தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு இந்தியா நிறுவனம் சுமார் 1,21,883 மெட்ரிக் பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களை குறைந்த பட்ச ஆதரவு விலையாக 596 கோடி ரூபாய்க்கு சேகரித்துள்ளது. இதன் மூலம் 89,145 விவசாயிகள் பயன் பெறுகிறார்கள்.

 

  1. பிரதமர் ஏழைகள் நல்வாழ்வித்யோஜனா திட்டத்தின் கீழ் சுமார் 5,516 மெட்ரிக் டன் பருப்பு வகைகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்ப அனுப்பப்பட்டுள்ளன.
  1. பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ், 24.3.2020 ஊரடங்கு அமலாக்கப்பட்ட நாள் முதல், சுமார் 8.31 கோடி விவசாய குடும்பங்கள் பயனடைந்துள்ளன, மேலும் 16,621 கோடி ரூபாய் அளவிலான விவசாயிகளின் நலத் திட்டங்களுக்காக இதுவரை செலவிடப்பட்டுள்ளது.
  1. வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களின் ஏற்றுமதியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கலந்தலோசிக்க காணொளி காட்சி மூலம் ஏப்ரல் 13ம் தேதி அன்று வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சக செயலாளர் தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்றது.

****************


(Release ID: 1614664) Visitor Counter : 189