வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

கோவிட்-19 பெருந்தொற்றை எதிர்கொள்வதற்கு PCMC செயல்படுத்தும் உத்திகளும் தீர்வுகளும்

Posted On: 14 APR 2020 3:15PM by PIB Chennai

பூனா நகர எல்லையின் ஒரு விரிவாக்கமாக உள்ள பிம்ப்ரி சின்ச்வாட், (Pimpri Chinchwad) பூனா பெருநகர மண்டலத்தின் கீழ் ஒரு அங்கமாக உள்ளது.  தொழிற்சாலைகளின் மையமாக உருவான இந்த நகரமானது பூனாவுக்கு வலிமையான நகரியமாக இருந்து இப்போது மிகப்பெரிய வளரும் நகரமாக மாறியுள்ளது.

பிம்ப்ரி சின்ச்வாட் நகராட்சியானது (Pimpri Chinchwad Municipal Corporation) கழிவுப்பொருள் மேலாண்மை மற்றும் துப்புரவு சேவைகளில் சிறப்பாகச் செயல்பட்டு வந்தது. மிக அண்மைக்காலத்தில், கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், PCMC தனது துரிதமான மற்றும் எச்சரிக்கையான நடவடிக்கைகளால் மற்றவர்களின் கவனத்தைக் கவர்ந்துள்ளது.

வைரஸ் தொற்றுக்கு எதிராக பலவிதமான புதிய முன்னெடுப்பு நடவடிக்கைகள் மற்றும் முக்கியமான புத்தாக்க நடவடிக்கைகளை PCMC தொடங்கியுள்ளது.

சம்பந்தப்பட்ட குடிமக்கள் அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் உதவி எண் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

பிசிஎம்சி-யின் செயல் தொகுப்பில் உள்ள அனைத்து டிஜிட்டல் தீர்வுகளிலும் தனித்து பிரத்யேகமாகத் தெரிவது ஸ்மார்ட் சாரதி மொபைல் செயலியே ஆகும்.  முதலில் இந்தச் செயலியானது கோவிட்-19 குறித்த சுயமதிப்பீட்டுப் பரிசோதனையை தருகிறது.  இது PCMC பகுதியில் வசிக்கின்ற குடிமக்களுக்கான ஆன்லைன் சுயமதிப்பீட்டுப் பரிசோதனை ஆகும்.

இரண்டாவதாக, தனிமைப்படுத்தப்பட்டவர் குறித்த நடமாட்ட கண்காணிப்பு செயலியில் உள்ளது. இது தனிமைப்படுத்தப்பட்டுள்ள நோயாளிகளைக் கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் ஏற்ற வழிமுறையாக உள்ளது.  அவர்களின் புவிசார் இருப்பிடத்தைக் கண்டறிவதுவே இதன் நோக்கமாகும்.

மூன்றாவதாக, செயலி மூலம் PCMC ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.

இறுதியாக இந்தச் செயலியானது, “எனக்கு – அருகில்“ என்ற அம்சத்தைக் கொண்டுள்ளதை மிக முக்கியமானதாகக் குறிப்பிடலாம்.  இது குடிமக்களுக்கு அருகில் உள்ள மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், சந்தைகள் என செயல்பாட்டில் உள்ள இடங்களைக் காட்டுவதோடு அவர்கள் அங்கு செல்வதற்கும் உதவுகிறது. தேவையான மக்களுக்கு அவர்களுக்கு அருகில் இலவசமாகக் கிடைக்கும் உணவு வழங்குமிடம், தங்குமிட வசதிகளைச் சுட்டிக்காட்டுகிறது.



(Release ID: 1614396) Visitor Counter : 192