விவசாயத்துறை அமைச்சகம்
ஊரடங்கின் போது களஅளவில் விவசாயப் பணிகளையும் விவசாயிகளையும் ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன
Posted On:
13 APR 2020 7:24PM by PIB Chennai
ஊரடங்கின் போது, விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், விவசாயப் பணிகளுக்கான வசதிகளைச் செய்து கொடுக்க, மத்திய அரசின் விவசாய, ஒத்துழைப்பு மற்றும் விவசாயிகள் நலத்துறை களஅளவில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேம்படுத்தப்பட்ட நிலவரம் வருமாறு;
- தேசிய உணவுப்பாதுகாப்பு இயக்கத்தின் கீழ், மாநிலங்களுக்கு விதைகள் விநியோகத்தை உறுதிசெய்ய, இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியம் பெறுவதற்கான விதை ரகங்கள் 10 ஆண்டுகளுக்கும் குறைவானதாக இருக்கவேண்டும். வடகிழக்குப்பகுதி, மலைப் பிராந்தியங்கள், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு மட்டும் , தேசிய உணவுப்பாதுகாப்பு இயக்கத்தின் கீழ், Truthful Label விதைகளை மானியத்துக்கு அனுமதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
- பிரதமர் விவசாய நல நிதித்திட்டத்தின் கீழ், 24.3.2020 முதல் அமலில் உள்ள ஊரடங்கின் போது, சுமார் 8.31 கோடி விவசாயிகளின் குடும்பங்கள் பயனடைந்துள்ளன. இதற்காக, ரூ.16,621 கோடி இதுவரை ஒதுக்கப்பட்டுள்ளது.
- பிரதமர் ஏழைகள் நலத்திட்டத்தின் கீழ், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சுமார் 3,985 மெட்ரிக் டன் பருப்பு வகைகள் விநியோகத்துக்காக அனுப்பப்பட்டுள்ளன.
- பஞ்சாபில், பரம்பராகத் விவசாய வளர்ச்சி திட்டத்தின் கீழ், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மின்சார வாகனம், வீடுகளுக்கு நேரடியாகச் சென்று இயற்கை விவசாய உற்பத்திப்பொருள்களை விநியோகித்து வருகிறது.
- மகாராஷ்டிராவில், 34 மாவட்டங்களில், ஆன்லைன் மற்றும் நேரடி விற்பனை முறை மூலமாக, 27,797 விவசாய உற்பத்தி அமைப்புகள் 21,11,171 குவிண்டால் பழங்கள் மற்றும் காய்கறிகளை விற்பனை செய்துள்ளன.
(Release ID: 1614234)
Visitor Counter : 228