குடியரசுத் தலைவர் செயலகம்

வைசாகி, விஷு, ரொங்காலி பிகு, நபா பார்ஷா, வைசகாடி, புத்தாண்டுப் பிறப்பு ஒட்டி ஆகியவற்றை ஒட்டி குடியரசுத் தலைவர் வாழ்த்து

Posted On: 13 APR 2020 11:50AM by PIB Chennai

 

நாட்டின் பல்வேறு பகுதிகளில் 2020 ஏப்ரல் 13, 14 தேதிகளில் கொண்டாடப்படும் வைசாகி, விஷு, ரொங்காலி பிகு, நபா பார்ஷா, வைசகாடி, புத்தாண்டுப் பிறப்பு ஆகியவற்றைஒட்டி குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்:

``வைசாகி, விஷு, ரொங்காலி பிகு, நபா பார்ஷா, வைசகாடி, புத்தாண்டுப் பிறப்பு கொண்டாட்ட நேரத்தில், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள சக குடிமக்களுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவின் பன்முகக் கலாச்சாரத்தில் உள்ள ஒற்றுமையின் அடையாளமாக இந்தத் திருவிழாக்கள் உள்ளன. மேலும், நமது விவசாயிகள் கொண்டாடுவதற்கான ஒரு தருணமாகவும் இது உள்ளது. நமது விவசாயிகள் உணவு தானியங்களை நமக்காக உற்பத்தி செய்வது மட்டுமின்றி, அவர்களுடைய ஓய்வறியா உழைப்பின் மூலம் நமக்கு உணவுப் பாதுகாப்பையும், வளமையையும் ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள்.

இப்போது கோவிட்-19 ஏற்படுத்தியுள்ள முன் எப்போதும் சந்தித்திராத சவாலை நாம், எதிர்கொண்டிருக்கிறோம். இந்த ஆண்டில் தனி நபர் இடைவெளி விதிமுறைகளை உரிய எச்சரிக்கையுடன் பின்பற்றுவதன் மூலம் கொரோனா வைரஸ் தாக்குதலைக் கூட்டாக முறியடிக்க இந்த விழாக்காலத்தில் உறுதி எடுத்துக் கொள்வோம்'' என்று குடியரசுத் தலைவர் கூறியுள்ளார்.

குடியரசுத் தலைவரின் வாழ்த்துச் செய்தியை இந்தியில் காண இங்கே கிளிக் செய்யவும்

 


(Release ID: 1613854)