குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
புத்தாண்டு, வைசாகி, விஷு, மசடி, வைஷ்காடி மற்றும் பகக் பிகு ஒட்டி நாட்டு மக்களுக்குக் குடியரசு துணைத் தலைவர் வாழ்த்து
Posted On:
13 APR 2020 10:16AM by PIB Chennai
நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏப்ரல் 13 மற்றும் 14 தேதிகளில் கொண்டாடப்படும் புத்தாண்டு, வைசாகி, விஷு, மசடி, வைஷ்காடி மற்றும் பகக் பிகு விழாக்களை ஒட்டி நாட்டு மக்களுக்குக் குடியரசு துணைத் தலைவர் திரு.எம். வெங்கய்ய நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், சோதனையான காலக்கட்டத்தை நாடு சந்தித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், இதுபோன்ற திருவிழாக்கள் நமது உத்வேகத்தைப் புதுப்பித்து, நமக்கு வழிகாட்டுதல்களை அளிப்பதாக உள்ளது என்று கூறியுள்ளார்.
அவருடைய வாழ்த்துச் செய்தி:
``மகிழ்ச்சிக்குரிய தருணமான வைசாகி, விஷு, புத்தாண்டு, மசடி, வைஷ்காடி மற்றும் பகக் பிகு கொண்டாட்டங்களை ஒட்டி நாட்டு மக்களுக்கு எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
புத்தாண்டு பிறப்பைக் கொண்டாடும் இந்தத் திருவிழாக்கள் புதிய தொடக்கங்கள், புதிய நம்பிக்கைகளை முன்னறிவிப்பு செய்யும் தருணங்களாக உள்ளன. அறுவடைகளுடன் இணைந்த திருவிழாக்கள் இயற்கையின் அற்புதம் மற்றும் செழிப்பைக் கொண்டாடும் தருணங்களாகும்.
புதிய கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிரான போராட்டத்தால், சோதனையான காலக்கட்டத்தை நாம் கடந்து கொண்டிருக்கும் நிலையில், இதுபோன்ற திருவிழாக்கள் நமது உத்வேகத்தைப் புதுப்பித்து வழிகாட்டுதல்களை அளிக்கின்றன.
வரக்கூடிய ஆண்டு அபரிமிதமான வளங்களைக் கொண்டு வருவதாக இருக்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். அந்த வளத்தைப் பகிர்ந்து கொள்வதுடன், நமது சக குடிமக்கள் மற்றும் அன்னை பூமியின் மீது அக்கறை காட்டுவதிலும் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தன்னலமின்மை, அன்பு, கருணை, பரிவு ஆகியவற்றின் மாண்புகள் நமக்குள் பெருகி, அமைதி, நல்லிணக்கம், வளமை மற்றும் மகிழ்ச்சி பெருகுவதாக அமைய வேண்டும் என வாழ்த்துகிறேன்.
நமக்கு வேண்டியவர்களுடன் வீடுகளிலேயே இந்தப் புத்தாண்டை நாம் கொண்டாடுவோம், பெருமளவு கூடுதல் மற்றும் பெரிய கொண்டாட்டங்களை தள்ளிவைப்போம்.
வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்.''
(Release ID: 1613828)
Visitor Counter : 101