பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

வன உற்பத்திப் பொருள் கொள்முதல்: மாநிலங்களுக்கு பழங்குடி கூட்டுறவு சந்தை மேம்பாட்டு இணையம் அறிவுறுத்தல்

Posted On: 11 APR 2020 8:22PM by PIB Chennai

சிறு வன உற்பத்திப் பொருள்களை (Minor Forest Produces) கொள்முதல் செய்வதற்கு சிறு வன உற்பத்திப் பொருளுக்கான (Minor Forest Produce) குறைந்தபட்ச ஆதரவு விலையில் (MSP) வாங்குவதற்கு தற்போதுள்ள நிதியைப் பயன்படுத்திக் கொள்ளும்படி இந்தியப் பழங்குடி சந்தை மேம்பாட்டு இணையம் (Tribal Cooperative Marketing Development Federation of India - TRIFED) மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மாநிலங்களில் உள்ள அரசுத்துறைகள், அமலாக்கப் பிரிவுகளுக்கு இந்த அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

இதையொட்டி, யுனிசெப் (UNICEF) நிறுவனத்துடன் இணைந்து ஓர் இணையவழிக் கருத்தரங்குக்கு (Webinar) இணையம் ஏற்பாடு செய்துள்ளது. வனச்செல்வ வளர்ச்சி மையங்களைச் (Van Dhan Vikas Kendras VDVKs)  சேர்ந்த சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்களுக்காக இந்த இணையவழிக் கருத்தரங்கு நடத்தப்படுகிறது. தற்போதைய சூழ்நிலையில் மனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது, சுத்தம், சுகாதாரம் பராமரிப்பது ஆகியவை குறித்து பழங்குடியினரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் இக்கருத்தரங்கு நடைபெறுகிறது.

 

இதையொட்டி சிறு வன வளச் செல்வங்களை குறைந்தபட்ச ஆதரவு விலையின் அடிப்படையில் சந்தைப்படுத்துவதற்கான  வழிகாட்டுநெறிகளை மத்திய பழங்குடியினர் நல அமைச்சகம் பிறப்பித்துள்ளது. இதற்காக 26.2.2019 தேதியிட்ட அறிவிக்கை (F. No. 19/17/2018) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

பழங்குடியினத்தவர் மீதான பாதிப்பைத் தணிப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு. அர்ஜுன் முண்டா மாநில முதலமைச்சர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில், பழங்குடியினர் வாழ்வாதாரத் தேவைக்காக குறைந்தபட்ச ஆதரவு விலைத் திட்டத்தின் (MSP) கீழ் சிறு வன உற்பத்திப் பொருள்களைக் கொள்முதல் செய்யும்படியும் அறிவுறுத்தியுள்ளார்.



(Release ID: 1613516) Visitor Counter : 110