ஆயுஷ்

ஹோமியோபதி மருத்துவர்கள் தொலைமருத்துவ சேவை புரிய வழிகாட்டுதல்கள்: இணையவழி கருத்தரங்கில் ஆயுஷ் அமைச்சர் தகவல்

Posted On: 11 APR 2020 11:52AM by PIB Chennai

ஹோமியோபதி சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கான வழிகாட்டுநெறிகளை மத்திய அரசு அங்கீகரித்துள்ளதுஎன்று மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் திரு. ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக் தெரிவித்தார்.

தற்போது பரவி வரும் கோவிட் 19 தொற்று பாதிப்பை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பணிக்குழுவினரோடு ஆயுஷ் மருத்துவத் துறைப் பணியாளர்கள் இணைந்து செயல்பட வேண்டும்என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

உலக ஹோமியோபதி தினத்தையொட்டி, இணைய வழி சர்வதேச கருத்தரங்கு (Webinar) வெள்ளிக்கிழமை (10.4.2020) நடைபெற்றதுஇந்த இணைய வழிக் கருத்தரங்குக்கு (Webinar) ஹோமியோபதி மருத்துவ ஆய்வு மத்திய குழுமம் (Central Council for Research in Homoeopathy) ஏற்பாடு செய்திருந்தது. ஹோமியோபதி மருத்துவத்தை உருவாக்கிய டாக்டர் சாமுவேல் ஹானிமென்னின் 265வது பிறந்த நாளையொட்டி உலக ஹோமியோபதி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த இணையவழிக் கருத்தரங்கில் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் ஆயுஷ் அமைச்சகத் துறைச் செயலாளர் வைத்யா ராஜேஷ் கொதெச்சா வாழ்த்துரை வழங்கினார்.

சர்வதேச ஹோமியோபதி அகாதெமி (கிரீஸ்) இயக்குநர் பேராசிரியர் டாக்டர் ஜார்ஜ் விதோல்கஸ், ஹோமியோபதி மருத்துவ ஆய்வு மத்திய கவுன்சில் இயக்குநர் (பொறுப்பு) டாக்டர் அனில் குரானா, தில்லி அரசு ஆயுஷ் துறை ஹோமியோபதி இயக்குநர் டாக்டர் ஆர்.கே. மன்சன்டா, தேசிய ஹோமியோபதி நிறுவனத்தின் (கோல்கத்தா) இயக்குநர் டாக்டர் சுபாஷ் சிங், ஆயுஷ் அமைச்சகத்தின் இயக்குநர் டாக்டர் எஸ்ஆர்கே வித்யார்த்தி, டாக்டர் வி.கே. குப்தா (இந்தியா), டாக்டர் ராபர்ட் வான் ஹஸேலன் (பிரிட்டன்), பேராசிரியர் ஆரோன் டோ (ஹாங்காங்) ஆகியோர் கருத்தரங்கில் பேசினர்.

 

கருத்தரங்கில் பங்கேற்ற வல்லுநர்கள் கோவிட் 19 தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்துவதில் ஹோமியோபதி மருத்துவத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்கோவிட் 19 தொற்று பாதிப்பு சிகிச்சைக்கு ஹோமியோபதி எந்த அளவுக்குத் துணை புரிகிறது என்ற தரவுகளையும் அவர்கள் எடுத்துரைத்தனர்.


(Release ID: 1613282) Visitor Counter : 338