விவசாயத்துறை அமைச்சகம்
முடக்கநிலை அமல் காலத்தில் வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலன் துறை மேற்கொண்ட நடவடிக்கைகள்
Posted On:
10 APR 2020 6:34PM by PIB Chennai
முடக்கநிலை காலத்தில் விவசாயிகளுக்கு உதவிடவும், வேளாண்மை நடவடிக்கைகளைத் தொடரச் செய்யவும், மத்திய அரசின் வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மிக சமீபத்திய நிலை வரையிலான தகவல்கள் இங்கே தொகுத்துத் தரப்பட்டுள்ளன:
- கொரோனா வைரஸ் பரவுதலைத் தடுப்பதற்கு விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் ஆரோக்கியத்தைப் பேணிட, 2020 கரீப் பருவத்தின் போது பயிர் அறுவடை , கதிரடித்தல் செயல்பாடுகள் தொடர்பான நிலையான இயக்கு நெறிமுறை அம்சங்கள் (SOP) குறித்து இந்தத் துறை சார்பில் மாநிலங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப் பட்டுள்ளது.
- கோதுமை உற்பத்தி மாநிலங்களில் மொத்த சாகுபடி பரப்பில் 26-33 சதவீதம் அளவுக்கு அறுவடை நடந்திருப்பதாகத் தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.
- 2020 ரபி பருவத்தின்போது நாபெட் அமைப்பு 1,07,814 மெட்ரிக் டன் அளவுக்கு பருப்பு வகைகளை (பயறு: 1,06,170 மெட்ரிக் டன்) மற்றும் எண்ணெய் வித்துகள் (கடுகு: 19.30 மெட்ரிக் டன் , சூரியகாந்தி: 1,624.75 மெட்ரிக் டன்) ஆகியவற்றை குறைந்தபட்ச ஆதரவு விலை அடிப்படையில் ரூ.526.84 கோடிக்குக் கொள்முதல் செய்துள்ளது. இதன் மூலம் 75,984 விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர்.
- நேரடிக் கொள்முதலுக்கு உகந்த நடவடிக்கைகள் எடுக்குமாறு மாநில அரசுகள் / யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் / விவசாயிகளின் உற்பத்தி அமைப்புகள் / கூட்டுறவுகளிடம் இருந்து, மொத்த வியாபாரிகள் / மொத்தமாக வாங்குபவர்கள்/ பதப்படுத்தல் செய்பவர்கள், வேளாண் உற்பத்தி சந்தைக் குழு சட்டத்தின் கீழான ஒழுங்குமுறைகளை வரன்முறை செய்து, வாங்குவதற்கு இது உதவியாக இருக்கும். காய்கறிகள் மற்றும் பழங்கள் சந்தை நிலவரத்தைும், வேளாண் விளை பொருள்கள் மாநிலங்களுக்கு இடையில் கொண்டு செல்லப்படுவது குறித்தும் இந்தத் துறை கூர்ந்து கவனித்து வருகிறது.
- சமீபத்தில் இ-நாம் என்ற மின் வணிக சந்தை தளத்தில் சரக்குகள் கொண்டு செல்வதற்கான வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தத் தொகுப்புடன் 7.76 லட்சத்துக்கும் மேற்பட்ட லாரிகள், 1.92 லட்சத்துக்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் ஏற்கெனவே தொடர்பில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
- அழுகும் தன்மையுள்ள தோட்டக்கலைப் பொருள்கள், விதைகள், பால் மற்றும் பால்பொருள்களை வேகமாக கொண்டு போய் சேர்க்கும் வகையில், அவற்றை உள்ளடக்கிய அத்தியாவசியப் பொருள்களை க் கொண்டு சேர்ப்பதற்கு 62 வழித்தடங்களில் 109 கால அட்டவணை பார்சல் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நாடு முழுக்க பொருள் வழங்கல் நிலை சங்கிலித் தொடர் தொடர்ந்து பராமரிக்கப்படுவதற்கு விவசாயிகள் /விவசாயிகளின் உற்பத்தி அமைப்புகள்/ வர்த்தகர்களுக்கும், நிறுவனங்களுக்கும் இது உதவிகரமாக இருக்கும்.
- 24.3.2020ல் இருந்து அமலில் இருக்கும் முடக்கநிலை காலத்தில் பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் சுமார் 7.77 கோடி விவசாக் குடும்பங்கள் பயன்பெற்றுள்ளன. இதுவரையில் ரூ.15,531 கோடி ரூபாய் இதில் வழங்கப்பட்டுள்ளது.
- 2020 ஜூன் 30 ஆம் தேதியுடன் நர்சரிகளுக்கு காலாவதியாகும் நட்சத்திரத் தரநிலை கொண்ட சான்றிதழின் செல்லத்தக்க காலத்தை 30 செப்டம்பர் 2020 வரையில் நீட்டிப்பதாக தேசிய தோட்டக்கலை வாரியம் கூறியுள்ளது.
- இந்தியாவில் தேவைக்கும் அதிகமான கோதுமை விளைச்சல் கிடைத்துள்ளது. சில நாடுகளிடம் இருந்து வந்த கோரிக்கைகளின் அடிப்படையில் ஆப்கானிஸ்தானுக்கு 50 ஆயிரம் மெட்ரிக் டன், லெபனானுக்கு 40 ஆயிரம் மெட்ரிக் டன் அளவுக்கு கோதுமை ஏற்றுமதி செய்யும்படி தேசிய வேளாண்மை சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு (NAFED) நிறுவனம் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது.
*****
(Release ID: 1613266)
Visitor Counter : 220
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada