அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

கோவிட்19 : கிருமிநாசினி தெளிக்கும் தொற்று அழிப்பான் நடைபாதை மற்றும் சாலை சுத்திகரிப்பான் அமைப்புகளை துர்காபூரில் உள்ள சி எஸ் ஐ ஆர் - சிஎம்ஈஆர்ஐ வழங்கியுள்ளது

Posted On: 10 APR 2020 11:52AM by PIB Chennai

உலகம் முழுவதையும் உருக்குலைத்து வருகின்ற நாவல் கொரோனா வைரஸ் கோவிட் 19 சூழ்நிலையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி கழகம்(சி எஸ் ஐ ஆர்) அறிவியல் தொழில்நுட்பத் தீர்வுகளை அளிப்பதற்கான முயற்சிகளை அதிகரித்து வருகிறது. சி எஸ் ஐ ஆர் அமைப்பின் முதன்மை பொறியியல் ஆய்வுக் கூடமான துர்காபூரில் உள்ள சி எஸ் ஐ ஆர் மத்திய மெக்கானிக்கல் இன்ஜினியரிங் ஆராய்ச்சி அமைப்பு (சிஎம்ஈஆர்) இந்த வைரஸ் கிருமியை அழிப்பதற்கான எதிர்ப்பு நடவடிக்கைகளில் உதவக்கூடிய தொழில்நுட்பங்களையும், பொருட்களையும்உருவாக்கியுள்ளது.

தற்போதைய சூழ்நிலைக்கு தேவையான வகையில் உருவாக்கப்பட்டுள்ள, சில தொழில்நுட்பங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கிருமிநாசினி தெளிக்கும் தொற்று அழிப்பான் நடைபாதைகள்:

நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்கக் கூடிய முழுமையான அமைப்பாக கிருமிநாசினி தெளிக்கும் தொற்று அழிப்பான் நடைபாதைகள் கருதப்படுகின்றன. இந்த நடைபாதையில் உள்ள ஒருவர் மீது தெளிக்கப்படும் இந்தக் கிருமிநாசினி அவரது முழு உடல் மீதும் தெளிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதைகளை, தனிமைப்படுத்தும் வசதிகள் உள்ள இடங்கள்,  மக்கள் சென்றுவரும் நுழைவிடங்கள், மருத்துவ மையங்கள், பலர் கூடக் கூடிய இடம் என்று கருதப்படும் தலங்கள் ஆகிய இடங்களில் பயன்படுத்தலாம்.

கிருமிநாசினி தெளிக்கும் தொற்று அழிப்பான் நடைபாதை

டிஎம்சி பிரதிநிதிகள் நடைபாதையைப் பார்வையிடுகிறார்கள்

கிருமிநாசினி தெளிப்பதற்கான சாலை சுத்திகரிப்பான்கள்

CSIR CMER சாலை சுத்திகரிப்பான் சானிடைசிங் யூனிட், சாலைகளில் கிருமிநாசினிகள் தெளிப்பதற்கான டிராக்டர் மீது வைத்துக்கொண்டு சாலைகளில் பயன்படுத்தக்கூடிய சாலை சுத்திகரிப்பான்களாகும்.  இவற்றை தேசிய நெடுஞ்சாலைகளிலும், சுங்கச்சாவடிகளுக்கு அருகிலும் பயன்படுத்தலாம்.  வீட்டு வளாகங்கள், அலுவலக வளாகங்கள், விளையாட்டு மைதானங்கள், அடுக்கு மாடி கட்டடக் குடியிருப்புகள், ஆகியவற்றிலும் இவற்றைப் பயன்படுத்தலாம். இந்த சாலை கிருமிநாசினி யூனிட்டுகள் 16 அடி கொண்டவை. இந்த கிருமி நாசினி தெளிப்பது பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதற்காக 15 முதல் 35 பார் அழுத்தம் கொண்டவை.

அதிகபட்ச இடங்களில் தெளிக்கக்கூடிய வகையில்,12 நாசில்கள் (துவாரங்கள்) கொண்டவை. டேங்க்கின் கொள்ளளவு 2,000 முதல் 5,000 லிட்டர். 22 எல்எல்பி. இதன் மூலம் 75 கிலோ மீட்டர் நீளத்துக்கு சாலையில் கிருமிநாசினியைத் தெளிக்க முடியும்.

டிராக்டர் மூலம் கிருமிநாசினி தெளிப்பான்களை சாலையில் பீய்ச்சும் முறை காண்பிக்கப்பட்டுள்ளது.

                     

 

 

                                    

**********



(Release ID: 1612870) Visitor Counter : 182