பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் முன்களத்தில் இருப்பவர்களுக்கு iGOT என்ற இ-கற்றல் வசதியை அளிக்கிறது பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை

கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் இருக்கும் அனைத்து சுகாதாரப் பணியாளர் மற்றும் இதர பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்க டிஜிட்டல் தளம் ஒன்றை இந்திய அரசின் கீழ் செயல்படும் அலுவலர் நலன் மற்றும் பயிற்சித் துறை அறிமுகம் செய்துள்ளது

Posted On: 08 APR 2020 7:06PM by PIB Chennai
கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் முன்களத்தில் நிற்கும் அலுவலர்கள் அனைவருக்கும், நோய்த் தொற்று கையாளுதல் தொடர்பான பயிற்சிகள் அளித்தல் மற்றும் சமீபத்திய தகவல்களை அளிக்கும் வகையிலான இ-கற்றல் தளம் ஒன்றை (https://igot.gov.in) அறிமுகம் செய்வதாக மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை அறிவித்துள்ளது. இரண்டாம் கட்ட நிலையில் பணியாற்றுபவர்களுக்கு இதற்கான பயிற்சிகள் அளிப்பதன் மூலம், அவசர சூழ்நிலை காலங்களின் சவாலை சமாளிக்க இந்தியா மேலும் தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்ள முடியும். டாக்டர்கள், நர்ஸ்கள், துணை மருத்துவ அலுவலர்கள், தூய்மைப் பணியாளர்கள், தொழில்நுட்ப அலுவலர்கள், நர்சிங் துணை நிலை தாதிகள் (ஏ.என்.எம்.), மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள், மக்கள் பாதுகாப்பு அதிகாரிகள், பல்வேறு காவல் துறை அமைப்புகள், என்.சி.சி., நேரு யுவ கேந்திர சங்கதன், என்.எஸ்.எஸ்., இந்திய செஞ்சிலுவைச் சங்கம், பாரத சாரணர் மற்றும் வழிகாட்டிகள் மற்றும் பிற தன்னார்வலர்களுக்கு உதவும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. திறமையானவர்களால் வடிவமைக்கப்பட்டு, குறிப்பிட்ட பிரிவினருக்கான வகையிலான விஷங்களைக் கொண்டதாக, பயனாளர் அனைவரும் தாம் இருக்கும் வீடு அல்லது பணியிடத்தில் இருந்தவாறு, தன்னிடம் இருக்கும் டிஜிட்டல் சாதனத்தை பயன்படுத்தி இந்த வசதியைப் பெறலாம். மக்கள் தொகை தேவைக்கு ஏற்ப iGOT தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வரக்கூடிய வாரங்களில் சுமார் 1.50 கோடி பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இதன் மூலம் பயிற்சி பெறுவார்கள். தொடக்க நிலையில் 9 கல்வித் திட்டங்கள் இதில் தொடங்கப்பட்டுள்ளன. கொவிட் தாக்குதலின் அடிப்படைகள், ஐ.சி.யூ. கவனிப்பு, வென்டிலேட்டர் கையாளுதல், மருத்துவ ரீதியாகக் கையாளுதல், முழு உடல் பாதுகாப்பு கவச உடை மூலம் நோய்த் தொற்றைத் தடுத்தல், நோய்த் தொற்று கட்டுப்பாடு மற்றும் தடுத்தல், தனிமை முகாம் மற்றும் தனிமைப்படுத்தி சிகிச்சை, ஆய்வக சாம்பிள் சேகரிப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனை, கொவிட் 19 பாதித்தவர்களைக் கையாளுதல், கொவிட் 19 பயிற்சி போன்ற தலைப்புகளில் இந்த பாடத் திட்டங்கள் உள்ளன. கொவிட் 19 குறித்த சமீபத்திய தகவல்களை அறிந்து கொள்வதன் மூலம், ஒரே தளத்தில் அனைத்துத் தகவல்களையும் அறிந்து கொள்வதன் மூலம் இப்போதுள்ள நிலைமையைக் கையாளுதல் மற்றும் அவசர நிலை தேவைகளை கையாளுதலுக்கான வழிமுறைகளை கொவிட் - வீரர்கள் கற்றுக்கொள்ளும் அணுகுமுறையுடன் இது தயாரிக்கப்பட்டுள்ளது. எந்த நேரத்திலும், எந்த இடத்தில் இருந்தும் வரும் கணக்கற்ற கோரிக்கைகளுக்கு ஏற்ப சேவைகள் அளிக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. வீட்டு கம்ப்யூட்டர்கள் அல்லது செல்போன்களில் இருந்து, பயன்படுத்துவதற்கு எளிதான வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, இந்தத் தளத்தில் நுழைய முடியும். அதனால் எல்லோரும் இதைப் பயன்படுத்த முடியும். இத்தகைய தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான iGOT தளம் பின்வரும் இணையதள முகவரியில் தொடங்கப்பட்டுள்ளது - https://igot.gov.in . இந்த தளத்தின் முதலாவது வெர்சனை Google Chrome மற்றும் Mozilla Firefox பிரவ்சர்கள் மூலம் அணுகலாம். அடுத்து வரும் வெர்சன்களை, பிற பிரவ்சர்கள் மூலமாகவும் அணுகலாம். ********

(Release ID: 1612419) Visitor Counter : 122