பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

சிறு வன உற்பத்திப் பொருட்களை குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யுமாறு மாநில முதலமைச்சர்களுக்கு திரு. அர்ஜூன் முண்டா கடிதம்

Posted On: 08 APR 2020 4:51PM by PIB Chennai
சிறு வன உற்பத்திப் பொருட்களை ஊக்குவிக்கும் வகையில், அவற்றைக் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்ய அது தொடர்பான மாநில முகமைகளுக்கு அறிவுரை வழங்குமாறு, மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு.அர்ஜூன் முண்டா, மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். உத்தரப்பிரதேசம், குஜராத், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்ட்ரா, அசாம், ஆந்திரா, கேரளா, மணிப்பூர், நாகாலாந்து, மேற்கு வங்கம், ராஜஸ்தான், ஒடிசா, சத்தீஷ்கர், ஜார்க்கண்ட் உள்ளிட்டவை இந்த மாநிலங்கள். கொவிட்-19 தொற்றுப் பரவல் நாடு முழுவதும், முன்னெப்போதும் காணாத சவாலை தற்போதைய சூழ்நிலையில் ஏற்படுத்தியுள்ளதாக அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். பாதிப்பின் அளவில் மாற்றம் இருந்தாலும், கிட்டத்தட்ட, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. பழங்குடியின சமுதாயத்தினர் உள்பட ஏழை, எளிய மக்கள், இதனால் பெருமளவுக்கு பாதிப்புக்குள்ளாகும் பிரிவாக உள்ளனர். பல பகுதிகளில், சிறு வனப் பொருட்களைகளையும், மூங்கில் அல்லாத உற்பத்திப் பொருட்களையும் சேகரிப்பதற்கும், அறுவடை செய்வதற்கும் இது உச்சபட்ச பருவமாகும். இந்த நிலையில், பழங்குடியினரின் நலனையும், அவர்களது பொருளாதாரத்தையும் பாதுகாக்கும் வகையிலும், அவர்களது உயிரையும் வாழ்வாதாரத்தையும் காக்கும் வகையிலும் சில தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நகர்ப்புறப் பகுதிகளில் இருந்து பழங்குடியினர் வசிக்கும் இடங்களுக்கு இடைத்தரகர்கள் செல்வதையும், அவர்களது நடமாட்டத்தையும் தடுப்பது மிகவும் அவசியம் என திரு. முண்டா, தமது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார். இதன் மூலம் பழங்குடியின சமுதாயத்தினர் மத்தியில் கொரோனோ வைரஸ் பரவுவதைத் தடுக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

(Release ID: 1612317) Visitor Counter : 132