குடியரசுத் தலைவர் செயலகம்
குடியரசு தலைவரின் மகாவீரர் ஜெயந்தி வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
05 APR 2020 6:55PM by PIB Chennai
மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு, தனது வாழ்த்துச் செய்தியில் குடியரசு தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் கூறியிருப்பதாவது :
"மகாவீரர் ஜெயந்தி நன்னாளில், அனைத்து குடிமக்களுக்கு, குறிப்பாக சமண சமயத்தவருக்கு, எனது வணக்கங்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகத்தில் அமைதி, அன்பு, நல்லொழுக்கம் மற்றும் சமாதானம் நிலவ பகவான் மகாவீரரின் வாழ்க்கையில் இருந்தும் போதனைகளில் இருந்தும் நாம் உத்வேகம் கொள்வோம். மேலும், கொவிட்-19 வைரஸ் பரவலைக் கருத்தில் கொண்டு, மக்கள் அனைவரும் சமூக இடைவெளி உட்பட அரசின் வழிகாட்டுதல்களை அனைத்தையும் பின்பற்றி அதைத் தடுப்போம்."
(வெளியீட்டு அடையாள எண்: 1611530)
வருகையாளர் எண்ணிக்கை : 85