குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் குடியரசு துணைத் தலைவரும், அவருடைய மனைவியும் விளக்குகள் ஏற்றினர்

Posted On: 05 APR 2020 9:10PM by PIB Chennai

இந்திய குடியரசு துணைத் தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு, தன் மனைவி திருமதி உஷாம்மாவுடன் புதுடெல்லியில் குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் இன்றிரவு 9 மணிக்கு விளக்குகள் ஏற்றி, கொவிட் -19 நோய்த் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒற்றுமையை வெளிப்படுத்தினார்.

புதிய கொரோனா வைரஸ் உருவாக்கியுள்ள இருளை அகற்றுவதில் நம்முடைய ஒற்றுமை மற்றும் கூட்டு பலத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார் என்று குறிப்பிட்ட குடியரசு துணைத் தலைவர், ஒன்றுபட்ட முயற்சியின் ஆழமான வல்லமையை வெளிப்படுத்திய நாட்டு மக்களுக்கு பாராட்டு தெரிவித்துக் கொண்டார்.

கொரோனாவுக்கு எதிரான இந்த நடவடிக்கையில் பங்களிப்பு செய்த அரசுத் துறைகள், நிறுவனங்கள், ஊடகங்களுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

வெவ்வேறு பங்காளர்களுடன் திறந்தநிலையில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டியதன் அவசர அவசியம் இருப்பதாகக் கூறிய அவர், தனிப்பட்ட மற்றும் கூட்டு நிலை அளவில் தெரிவிக்கப்படும் கருத்துகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்றும் கூறினார்.

இதற்கிடையில், மாநிலங்களவைத் தலைவராகவும் இருக்கும் குடியரசு துணைத் தலைவர், கொவிட்-19 பாதிப்பு நீங்கி இயல்புநிலை திரும்பும் வரையில் தன் ஊதியத்தில் 30 சதவீதத்தை ஒவ்வொரு மாதமும் வழங்க முடிவு செய்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.


(Release ID: 1611525) Visitor Counter : 121