தேர்தல் ஆணையம்

கோவிட் 19 தொற்று காரணமாக மாநிலங்களவை தேர்தல் மீண்டும் தள்ளிவைப்பு: இந்தியத் தேர்தல் ஆணையம்

Posted On: 03 APR 2020 8:23PM by PIB Chennai

தற்போது நிலவும் எதிர்பாராத, சுகாதார அவசரநிலை காரணமாக, இந்திய தேர்தல் ஆணையம், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 153 மற்றும் இந்திய அரசியல் சாசனம் பிரிவு 324 ன் படி, ஏழு  மாநிலங்களில் 18 இடங்களுக்கான மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தலை ஒத்திவைத்துள்ளது.

கோவிட் 19 தொற்று காரணமாக நிலவும் தற்போதைய, எதிர்பாராத, சுகாதார நெருக்கடி நிலையைக் கருத்தில் கொண்டு, ஆணையம், தற்போதைய நிலைமைகளை எல்லா விவரங்களையும் சூழல்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு மீண்டும் பரிசீலித்தது. பொதுமக்களின் பாதுகாப்பை பராமரிப்பதற்காகவும், சுகாதாரக் கேடு விளையாமல் இருப்பதற்காகவும் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின் காரணமாக, தற்போதைய சூழலில் தேர்தல் நடவடிக்கைகளை தொடர்வது சாத்தியமாக இருக்காது என்று முடிவெடுத்துள்ளது.

இந்தத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல், தேர்தல் தொடர்பான மீதமுள்ள செயல்பாடுகளுக்கு, ஏற்கனவே வெளியிட்டதுபோல், அறிக்கைகளில் குறிப்பிட்டுள்ளபடி நீடிக்கும்.

தற்போதைய நிலைமைகளைப் பரிசீலித்த பிறகு, இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த தேர்தல் மற்றும் வாக்கு எண்ணும் பணிகளுக்கான, புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும்.



(Release ID: 1611008) Visitor Counter : 134